உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Sunday, December 27, 2009

தோல்வியிலிருந்து தப்பிக்கொள்ள புது வழி சங்காவின் சாதுரியம்!!

இலங்கை இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய டெஸ்ட்,20 -20 ,ஒரு நாள் தொடர்கள் ஒருவாறு முடிவுக்கு வந்துள்ளன. அந்தவகையில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இலங்கை ஒன்றைத்தானும் வெல்ல முடியாமல்போனதுடன் ஒரு போட்டியை சமன் செய்திருந்தது. இருந்தபோதிலும் 20 -20 போட்டியில் இலங்கை ஒருபோட்டியில் வெற்றிபெற்று தொடரை சமநிலை செய்தது. மேலும் ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3 -1 என்ற கணக்கில் வென்று தொடரை வெற்றிகொண்டிருக்கின்றது.

அந்த வகையில் இன்று நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டி மோசமான ஆடுகளம் என்ற இலங்கையனித் தலைவர் குமார் சங்கக்காரவின் புகாரையடுத்து 23 .3 ஓவர்கள் பந்துவீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டிருக்கின்றது. இன்றைய தினம் டில்லியில் இலங்கை நேரப்படி காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மகேந்திரசிங் டோனி தலைமையிலான இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

எனவே முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கையணி 23 .3 ஓவர்கள் பந்துவீசப்பட்ட நிலையில் 5 விக்கட்டுகளை இழந்து 85 ஓட்டங்களை பெற்று தடுமாறிக்கொண்டிருந்தபோதுதான் அணியின் தலைவர் சங்கக்காரவினால் டில்லி மைதானம் மோசமானது என்கின்ற புகார் தெரிவிக்கப்பட்டது. இதன்காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இன்றைய போட்டியில் இலங்கையணி வீரர்கள் மிகவும் மோசமான துடுப்பாட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தார்கள்.

அந்தவகையில் நான்காவது ஒருநாள் போட்டியில் மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தரங்க போட்டியின் முதலாவது பந்துவீச்சிலையே ஓட்டம் எதனையும் பெறாத நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். உண்மையில் இதன் காரணமாக இலங்கையணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது என்றுதான் சொல்லவேண்டும். இருந்தபோதிலும் நான்காவது போட்டியில் சொதப்பியவர்களும், இரவு நேர மதுபான விடுதிச் சர்ச்சையில் சிக்கியவர்க்களுமான டில்ஷான், சனத் ஜெயசூரிய ஆகிய இருவரும் இந்தப்போட்டியில் கொஞ்சம் நிதானமாக செயற்பட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். இதில் சனத் இலங்கையணி சார்பாக அதிகபட்ச ஓட்டமாக 31 ஓட்டங்களையும், டில்ஷான் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஏனைய எந்தவொரு வீரரும் இலங்கையணி சார்பில் 20 ஓட்டங்களைக் கடக்கவில்லை. உதிரிகளாக இந்தியணியினரால் 10 ஓட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. இன்னுமொரு முக்கியமான விடயம் இன்றையதினம் இலங்கையணி சார்பாக தனது முதலாவது ஒரு நாள்போட்டி அறிமுகத்தை மேற்கொண்ட முதுமலிங்க புஷ்பகுமார ஆட்டம் கைவிடப்படும்போது ஆட்டமிழக்காமல் 7 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இன்றையபோட்டியில் இலங்கையணியின் சராசரி ஓட்டப்பெறுமானம் 3 .53 ஆகக் காணப்பட்டது.

இந்தியணி சார்பாக இன்றைய தினம் சஹீர்ஹான் 8 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 31 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார். இன்றைய தினம் தனது ஒருநாள் போட்டி அறிமுகத்தை மேற்கொண்ட சுதீப் தைகி 6 .3 ஓவர்கள் பந்து வீசி ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 15 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கட்டினை வீழ்த்தினார். ஹர்பஜன்சிங் 4 ஓவர்கள் பந்துவீசி 12 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கட்டினை வீழ்த்தினார். நேஹரா 5 ஓவர்கள் பந்து வீசி 24 ஓட்டங்களைக்கொடுத்த போதிலும் எந்தவித விக்கட்டினையும் அவரால் வீழ்த்த முடியாமல்போனது.

இந்தியஅணியின் பந்து வீச்சு இவ்வாறு இருக்க இன்றைய போட்டி கைவிடப்பட்டமையால் மோசமான ஒரு தோல்வியிலிருந்து இலங்கையணி தப்பியதாக சொல்லிக்கொள்ள முடியும். எனக்கு ஒரு சின்ன சந்தேகம் அதாவது டில்லி ஆடுகளம் மோசமானது என்பது சங்கக்காரவிற்கு ஏன் 23 .3 ஓவர்கள் பந்துவீசப்பட்ட பின்னர்தான் தெரிய வந்தது??? மேலும் இன்றையபோட்டி பெரிதும் எதிர்பார்க்கப்படாத ஒரு போட்டி என்றாலும் கொஞ்சம் விறுவிறுப்பான போட்டியாக இருக்குமென்றே பலரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் ஏமாற்றியது இலங்கையணி... சரி இனி வங்கதேசத்தில் நடைபெறவுள்ள முக்கோணத் தொடரிலாவது இந்தியாவை இலங்கை பழிதீர்க்குமா??? வழமைபோல பொறுத்திருந்துதான் பார்ப்போமே!!!

5 comments:

அ.ஜீவதர்ஷன் said...

//சங்கக்காரவிற்கு ஏன் 23 .3 ஓவர்கள் பந்துவீசப்பட்ட பின்னர்தான் தெரிய வந்தது??? //

சரியான கேள்வி,முன்னரே நிறுத்தியிருக்க வேண்டும்
,இது சங்ககாராவின் தவறே,ஆனால் இதனை சங்கக்காரவுக்கு சுட்டிக்காட்டியது மகேலதான். அது தவிர இந்த ஆடுகளத்தில் உண்மையிலேயே விளையாட முடியாதுதான். இல்லாவிட்டால் போட்டியை நிறுத்த மத்தியஸ்தர்கள் முடிவெடுத்திருக்க மாட்டார்கள், மற்றும் ஆடுகளம் தயார் செய்தவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். மற்றும் இந்த ஆடுகளம் ரஞ்சி போட்டிகளோ அல்லது முதல் தரபோட்டிகளோ அண்மைக்காலமாக நடாத்தப்படாமல் முதல் முறையாக நீண்ட நாட்களுக்கு பின்னர் இந்தப் போட்டி நடாத்தப்பட்டது. மற்றும் இது வழமையாக போட்டி நடக்கும் டெல்லி மைதானமில்லை

அ.ஜீவதர்ஷன் said...

//சங்கக்காரவிற்கு ஏன் 23 .3 ஓவர்கள் பந்துவீசப்பட்ட பின்னர்தான் தெரிய வந்தது??? //

சரியான கேள்வி,முன்னரே நிறுத்தியிருக்க வேண்டும்
,இது சங்ககாராவின் தவறே,ஆனால் இதனை சங்கக்காரவுக்கு சுட்டிக்காட்டியது மகேலதான். அது தவிர இந்த ஆடுகளத்தில் உண்மையிலேயே விளையாட முடியாதுதான். இல்லாவிட்டால் போட்டியை நிறுத்த மத்தியஸ்தர்கள் முடிவெடுத்திருக்க மாட்டார்கள், மற்றும் ஆடுகளம் தயார் செய்தவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். மற்றும் இந்த ஆடுகளம் ரஞ்சி போட்டிகளோ அல்லது முதல் தரபோட்டிகளோ அண்மைக்காலமாக நடாத்தப்படாமல் முதல் முறையாக நீண்ட நாட்களுக்கு பின்னர் இந்தப் போட்டி நடாத்தப்பட்டது. மற்றும் இது வழமையாக போட்டி நடக்கும் டெல்லி மைதானமில்லை

ARV Loshan said...

செந்தூரன், விளையாட்டை,விதிகளை,விளையாடப்படும் முறைகளை சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
விமர்சிக்கமுதலில் போட்டிகளின்போது நேர்முக வர்ணனைகளில் சொல்லப்படும் விடயங்கள்,விமர்சகர்கள் கூறும் விடயங்களையும் ஆராயவேண்டும்.

நீங்கள் இந்திய ரசிகர் போலத் தெரிகிறது. ஆனால் இலங்கை அணியைப் பற்றி சேறு பூசாதீர்கள்.
நடந்தது என்ன என்று தெளிவாக அறிந்து கொண்டே இப்படியான பதிவுகள் இடப்படவேண்டும்.

கொஞ்சம் எனது பதிவையும் கிரிக்கெட் தளங்களையும் வாசித்தால் முழு விஷயமும் உண்மை விபரமும் புரியும்..
http://loshan-loshan.blogspot.com/2009/12/blog-post_28.html

மயில்வாகனம் செந்தூரன். said...

///எப்பூடி ... said...///



///சரியான கேள்வி,முன்னரே நிறுத்தியிருக்க வேண்டும்///

உண்மைதான்...

///அது தவிர இந்த ஆடுகளத்தில் உண்மையிலேயே விளையாட முடியாதுதான். இல்லாவிட்டால் போட்டியை நிறுத்த மத்தியஸ்தர்கள் முடிவெடுத்திருக்க மாட்டார்கள், மற்றும் ஆடுகளம் தயார் செய்தவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்.///

நீங்கள் சொன்ன கருத்துடன் நானும் உடன்படுகிறேன்.. மறுக்கவில்லை..அதுதான் உண்மையும்கூட..

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் இதயங்கனிந்த நன்றிகள்..
அடிக்கடி வாருங்கள்..

மயில்வாகனம் செந்தூரன். said...

///LOSHAN said... ///

///விளையாட்டை,விதிகளை,விளையாடப்படும் முறைகளை சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
விமர்சிக்கமுதலில் போட்டிகளின்போது நேர்முக வர்ணனைகளில் சொல்லப்படும் விடயங்கள்,விமர்சகர்கள் கூறும் விடயங்களையும் ஆராயவேண்டும்.////

உண்மைதான் அண்ணா.. ஆனால் நான் நினைக்கிறேன் தலைப்பில்தான் சர்ச்சையே தவிர உள்ளே உள்ள விடயங்களிலல்ல....


எனக்கு விளையாட்டு விதிகள் முழுமையாகத் தெரியாதுதான்.. ஆனாலும் நேற்றையபோட்டி நிறுத்தப்பட்டமைக்கான நியாயம் தெரியும்... அது நிறுத்தப்பட வேண்டிய போட்டிதான் என்பதில் சந்தேகம் இல்லை...

****எனக்கு ஒரு சின்ன சந்தேகம் அதாவது டில்லி ஆடுகளம் மோசமானது என்பது சங்கக்காரவிற்கு ஏன் 23 .3 ஓவர்கள் பந்துவீசப்பட்ட பின்னர்தான் தெரிய வந்தது???****

இதைத் தவிர உள்ளே இலங்கையணி பற்றி நான் ஒன்றும் எனது தனிப்பட்ட கருத்துக்களை புகுத்தவில்லையே!!

\\\\நீங்கள் இந்திய ரசிகர் போலத் தெரிகிறது. ஆனால் இலங்கை அணியைப் பற்றி சேறு பூசாதீர்கள்.\\\

அண்ணா நான் எந்த அணியினதும் ரசிகன் அல்ல... மாறாக விளையாட்டை விளையாட்டாகவும், திரைப்படங்களை திரைப்படங்களாகவும் ரசிப்பவன்,,, எனது இந்தப் பதிவு இலங்கையணியின் மீது சேறு பூசுவதாக அமைந்திருந்தால் அதற்காக ஒட்டுமொத்த இலங்கையணி ரசிகர்களிடமும் மன்னிக்க வேண்டுகிறேன்...

மேலும் லோஷன் அண்ணா உங்கள் வருகையை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை..

உங்கள் மேலான ஆலோசனைகளை மதிக்கிறேன்..தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்...

வருகைக்கும், கருத்துக்கும் இதயத்தால் இனிய நன்றிகள் அண்ணா...

அடிக்கடி வாருங்கள் அண்ணா..