உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Saturday, November 10, 2012

வெற்றி fm சிலரிடம் சில கேள்விகள்..

அண்மைக் காலமாக இலங்கை ஊடகத்துறை தொடர்பில் எனக்கு தெரிந்த விடயங்களையும், நான் தேடி எடுத்துக் கொண்ட சில விடயங்களையும் தொகுத்து ஒரு நீண்ட பதிவினை இடவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. எனினும் இலங்கையில் இந்த துறையுடன் தொடர்புபட்ட சிரேஷ்டமானவர்களுடன் கலந்துரையாடாமல், அவர்களின் ஒப்புதல் இன்றி அவ்வாறான ஒரு பதிவினை இடுவதற்கு மனம் இடங்க்கொடுக்காமையால் அந்த திட்டத்தை கொஞ்சம் தள்ளி வைத்துள்ள நிலையில் இலங்கை பண்பலையில் பிந்திய வரவாக இருந்தும் பல நேயர்களின் அபிமானத்தை குறுகிய காலத்தில் பெற்றுக் கொண்ட வெற்றி fm வானொலியில் அதன் வெற்றிக்காக உழைத்த அறிவிப்பாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் அதன் பின்னரான சிலரின் நடைவடிக்கைகள் இந்த பதிவை எழுதுவதற்கு தூண்டியுள்ளது.

இந்த பதிவின் மூலமாக நான் கொஞ்சம் வெளிப்படையாகவே பேச விரும்புவதால் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் எல்லாம் இதில் குறிப்பிடப்படுவதுடன், சிலரை நோக்கி சில கேள்விகளையும் கேட்க விரும்புகின்றேன். எனவே குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்புபவர்கள் பின்னூட்டம் வாயிலாக பதிலளிக்கலாம். மேலும் இதில் சிலரை விமர்சிப்பதால் அவர்களின் அபிமானிகள், ஆதரவாளர்கள் ஆத்திரமடையலாம் என்பதும் எனக்கு நன்கு தெரியும். இருந்தும் இப்போது இந்தப்பதிவு வெற்றி fm தொடர்பான விடயங்களையும், அதனுடன் தொடர்புபட்ட ஊடகத்துறை சார்ந்த விடயங்களையும் அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பவர்களுக்கு உதவும் என்பதால் இந்தப்பதிவு இந்த நேரத்தில் பொருத்தமானதாக இருக்கும் என நம்புகின்றேன்.

இலங்கையை பொறுத்தவரையில் ஊடகத் துறையில் பணிபுரிவோர் அதிலும் குறிப்பாக வானொலித்துறையில் பணி புரிவோர் இந்திய சினிமா நட்சத்திரங்களைப் போல பார்க்கப்படுகின்றார்கள். இதனால்தானோ என்னவோ இலங்கையின் பலபாகங்களிலுமிருந்து ஏராளமான இளைஞர், யுவதிகள் அறிவிப்பாளராக வேண்டும் என்ற கனவுடன் தலைநகர் கொழும்பை நோக்கி படை எடுக்கின்றார்கள். இவர்களின் இந்த அதீத ஆர்வத்தை கடந்த காலங்களில் சில நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஊதியம் எதுவுமில்லாமல் இவர்கள் உழைப்பால் தங்கள் வானொலியை வளர்த்துக்கொண்ட வரலாறுகளும் உண்டு. 

என்ன நோக்கத்துக்காக ஒரு வானொலியை உருவாக்குகின்றோம் என்ற தெளிவான சிந்தனைகளும், நீண்டகால திட்டமிடல்களும் இல்லாமையினாலையே சில நிறுவனங்கள் இவ்வாறான நிலைக்குள் தள்ளப்படுகின்றன. இன்னும் சில நிறுவனங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஊதியமில்லாமல் உழைப்பை கறக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றன. ஊடக நிறுவனங்களின் இந்த பின்புலம், குழப்பங்கள் முகநூல், டுவிட்டர் போன்ற சமூக இணையத்தளங்கள் பிரபலமடையாத காலத்தில் வெளியில் இருப்பவர்களுக்கு சென்றடைவதில்லை. இருப்பினும் நடந்தது என்ன என்பதை அறிந்து கொள்வதில் நேயர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இப்போது சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி நேயர்களின் இந்த ஆர்வப் பசிக்கு தீனி போடும் வகையில் அமைந்துள்ளது. 

அதிலும் குறிப்பாக வெற்றி fm வானொலி அறிவிப்பாளர் குழுவிற்கு இழைக்கப்பட்ட அநீதி மிக இலகுவாக எல்லோரையும் சென்றடைந்துள்ளது. ஆனாலும் துன்பப்பட வேண்டிய ஒரு விடயத்தில் பல வேடிக்கைகளையும், விநோதங்களையும் பார்க்க முடிவது என்னவோ வருத்தம்தான். 

வெற்றி fm நடந்தது, நடப்பவை என்ன?

வெற்றி fm வானொலியில் லோஷன் அண்ணா தலைமையிலான அறிவிப்பாளர் குழாமிற்கு இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமையால் அதனை தட்டிக் கேட்ட அவர்களுடன் வெற்றி fm நிர்வாகம் மிகவும் மோசமாக நடந்துகொண்டமையும் பின்னர் அவர்கள் பணிப் புறக்கணிப்புக்கு செல்லும் நிலை ஏற்பட்டதும் இதன் தொடர்ச்சியாக அவர்களை வெற்றி fm நிறுவனம் பணி நிறுத்தம் செய்தமையும் பலருக்கும் தெரிந்த விடயம். 

இதனால் வெற்றியில் தொடர்ந்து பாடல்கள் மட்டுமே ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க வெற்றி fm ஆரம்பித்த காலத்திலிருந்து  வெற்றியுடன் இணைந்திருந்த ஹிஷாம் முகமட் தனது தலைமையில் வெற்றியில் நிகழ்ச்சிகளை ஆரம்பிக்க முயற்சித்தும் இறுதியில் அவரது எதிர்பார்ப்பு தவிடுபொடியாகி வெற்றியின் புதிய நிர்வாகியாக சூரியனின் முன்னாள் நிகழ்ச்சி முகாமையாளர்களில் ஒருவரும், கும்மாளம் நிகழ்ச்சியினை சூரியனில் படைத்தவருமான பரணிதரன் தெரிவு செய்யப்பட்டு இப்போது அவரின் தலைமையில் நிகழ்ச்சிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த இடத்தில் சில நியாயமான கேள்விகளை வெற்றி fm ஐ வழிநடத்தும் நிறுவனத்திடமும் அதன் புதிய நிர்வாகியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பரணி அண்ணாவிடமும், ஹிஷாம் முஹமட்டிடமும், இன்னும் சிலரிடமும் கேட்பது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

வெற்றி fm ஐ வழி நடத்தும் நிறுவனத்திடம் சில கேள்விகள்.

01- உங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த அறிவிப்பாளர் குழாமிற்கு எதற்காக இரண்டு மாத ஊதியத்தை கொடுக்காமல் மறுத்தீர்கள்?

02- ஊதியம் கேட்ட ஊழியர்களை எதற்காக மோசமாக நடத்தினீர்கள்?

03- ஊதியம் கேட்ட ஊழியர்களுடன் சமரசம் எதுவுமில்லாமல் எதன் அடிப்படையில் புதிய குழுவை அமைக்க முடிவு செய்தீர்கள்?

04- நியமிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிக்கும், அவர் தலைமையிலான அறிவிப்பாளர்களுக்குமாவது ஒழுங்காக ஊதியம் வழங்கப்படுமா? அல்லது புதிய நிர்வாகியையும், வானொலித் துறையில் ஆர்வத்துடன் வரும் இளைஞர் யுவதிகளையும் உங்கள் நிறுவன வளர்ச்சிக்காக பலிக்கடாவாக்க போகின்றீர்களா?

வெற்றி fm வானொலியின் புதிய நிர்வாகியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பரணி அண்ணாவிடம் சில கேள்விகள்..

01- நீங்கள் சூரியனிலிருந்து லோஷன் அண்ணா மற்றும் அறிவிப்பாளர்கள் விலகிச் சென்று வெற்றியில் இணையும் போது சூரியனில் நிலைத்திருந்தது ஏதேனும் பதவிகளை எதிர்பார்த்தா?

02- பல சந்தர்ப்பங்களில் பல அறிவிப்பாளர்களும் கடந்தகாலங்களில் இடம் மாறியதுண்டு. எனினும் தொழிலாளிகளின் ஊதியம் மறுக்கப்பட்டு அவர்கள் ஒட்டுமொத்தமாக பணிப் புறக்கணிப்பு செய்யும் போது இன்னுமொரு தொழிலாளியான நீங்கள் குறித்த நிறுவனத்தில் இணைந்தது தொழிலாளர் வர்க்கத்தை காட்டிக் கொடுத்ததாக அமையாதா? மேலும் ஊதியம் வழங்காத ஒரு நிறுவனத்தில் வெறும் பதவிக்காகவா இணைந்துகொண்டீர்கள்?

ஹிஷாம் முஹமட்டிடம் சில கேள்விகள்..

01- ஒட்டு மொத்த அறிவிப்பாளர்களுக்கும் ஊதியம் வழங்கப்படாத போது உங்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கப்பட்டது என்றா பணிப் புறக்கணிப்பில் ஒத்துழைக்காமல் இருந்தீர்கள்? 

02- தொழிலாளிகள் எல்லாம் பணிப் புறக்கணிப்பு செய்யும்போது நீங்கள் மட்டும் முதலாளிக்கு வால் பிடித்தது தொழிலாளிகளை காட்டிக் கொடுக்கும் செயற்பாடு என்பது உங்களுக்கு தெரியாதா?

03- நீங்கள்தான் வெற்றியை ஆரம்பிக்கும் போது இணைந்த முதலாவது அறிவிப்பாளர் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் உங்களுக்கு போதுமான அனுபவம் இல்லாமையால்தான் லோஷன் அண்ணாவை வெற்றி ஆரம்பித்த காலத்தில் நிர்வாகியாக அழைத்திருந்தார்கள். உங்களுக்கு வெற்றி ஆரம்பித்த காலத்தில் இணைந்து கொண்ட முதலாவது அறிவிப்பாளர் என்னும் அடிப்படையில் உதவி நிர்வாகி பதவி கிடைத்ததும் நமக்கு தெரியும். இந்த நிலையில் நீங்கள் நிர்வாகிப் பதவி ஆசைக்காகத்தான் எல்லோரும் பணிப் புறக்கணிப்பு செய்யும் போது முதலாளித்துவத்துடன் ஒட்டிக் கொண்டிருந்தீர்கள் என்று நாங்கள் சொன்னால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

வெற்றியுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டவர்கள் மட்டும்தான் தங்கள் முக நூல் வாயிலாகவும், டுவிட்டர் வாயிலாகவும் இந்த பிரச்சினை பற்றி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்களா என்றால் வெற்றியுடன் கொஞ்சமும் தொடர்புபடாத சில ஊடகத்துறையுடன் தொடர்புபட்டவர்களும் தங்கள் கடந்தகால தனிமனித விருப்பு வெறுப்புக்களுக்காக இந்த சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டிருப்பதையும் காண முடிகின்றது. 

குறிப்பாக முன்பு சூரியனில் நேற்றைய காற்று என்னும் நிகழ்ச்சியை படைத்த மப்ரூக் தனது முக நூலில் காகம், கிளை, கூடு என்று ஏதோ சொல்லவருகின்றார்.
இவர் என்ன சொல்லவருகின்றார்....?

மப்ரூக்கிடம் சில கேள்விகள்..

01- உங்களுக்கு சூரியனையும், சக்தியையும் விட்டால் வேற ஒன்றும் தெரியாமல் இருந்த காலத்தில்தான் வெற்றி உருவானது என்பது மறந்துவிட்டதா?
மேலும் எவனோ உருவாக்கிய ஒரு வானொலியில் அறிவிப்பாளனாய் மட்டும் இருந்த உங்களுக்கு ஒரு வானொலியை உருவாக்கி வெற்றியடைய செய்யும் ஆளுமையில்லை என்பதும், உங்களை போன்றவர்கள் வெறும் வார்த்தை ஜாலங்களில்தான் வல்லவர்கள் என்பதும் நமக்கு தெரியாத ஒன்றா என்ன?

02- நீங்கள் உங்கள் பதிவுகளில் ஏதோ நீங்கள்தான் சூரியனை உருவாக்கியவர் போல கதை அளக்கின்றீர்கள், ஆகாயத்தில் வசித்தவன் என்ற பெயரில் வானொலித் துறை பற்றி எல்லாம் தெரிந்தவர் நீங்கள்தான் என்பது போல எழுதித் தள்ளுகிறீர்கள் இப்படியான நீங்கள் 1999 ஆம் ஆண்டுகளில் சூரியனில் இணைந்துவிட்டீர்கள் ஆனால் அதன் பின்னர் சூரியனுக்கு வந்த லோஷன் அண்ணாவிடம்தானே நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரி பதவி வழங்கப்பட்டது. இப்படியிருக்கும்போது மற்றவர்களை மட்டம்தட்டி உங்களை பற்றி என்ன அடிப்படையில் இப்படி புளுகித் தள்ளுகின்றீர்கள்?

நீங்கள் இறுதியாக எழுதிய சூரியனைப் பிரிந்த கதையில் ஒரு தலைமைக்குள் கட்டுப்பட்டு வேலை செய்யத் தெரியாத உங்கள் இயல்பை வெளிப்படுத்தியமைக்கு நன்றி. நீங்கள் லோஷன் அண்ணா தலைமைக்குள் வேலை செய்த காலத்திலும், நவநீதன் அண்ணா தலைமையில் வேலை செய்த காலத்திலும் தலைமைக்குள் கட்டுப்பட்டு வேலை செய்ய தெரியாமல்தான் வெளியேறினீர்கள்  என்பது  நமக்கு தெரியாத ஒன்றா என்ன?

"தொழிலாளியை மதிக்கும் முதலாளிக்கு கட்டுப்படாத தொழிலாளியும், தொழிலாளியை மதிக்காத முதலாளியும் வாழ்ந்ததாய் சரித்திரமே இல்லை"

முக்கிய குறிப்பு- இந்தக் கட்டுரை அடுத்தவன் துன்பத்தில் இன்புறும் ஒரு சிலருக்கும், கூடவே இருந்து குழிபறிக்கும் கூட்டத்துக்கும், பதவிக்காக ஏங்குபவர்களுக்கும், முட்டாள்தனமான முதாளித்துவங்களுக்கும் சமர்ப்பணம்.