உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Saturday, September 18, 2010

பலே பாகிஸ்தான்..........

அலுவலகத்தில் வேலைகள் குறைவுதான் ஆனாலும் வலைப் பதிவு இடுவதற்கு நேரமில்லாத அளவுக்கு இதர வேலைகள் இருந்தமையால் கடந்த பெப்ரவரி மாதத்திற்கு பிறகு பதிவுகள் எதனையும் வழங்க முடியவில்லை.. இன்று இந்தப் பதிவை எழுதினாலும் தொடர்ந்து பதிவுகளை எழுத முடியுமா என்பதும் சந்தேகமாகத்தான் இருக்கின்றது.. முடியுமானவரை இனி என் பதிவுகள் ஒழுங்காக வரும் என்ற நம்பிக்கையுடன் தொடர்கின்றேன்...

நம்மைப் போன்ற விளையாட்டுப் பிரியர்களுக்கு இந்த நாட்கள் உற்சாகமானவை. காரணம் ஒருபக்கம் சம்பியன் லீக் போட்டிகள் இன்னுமொருபக்கம் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்ற ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் என்று விளையாட்டு உலகம் பரபரப்பாக இருக்கின்றது...

அந்த வகையில் கடந்த பத்தாம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பித்த பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. அடுத்து 12 ஆம் திகதி நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து அணிதான் வெற்றி பெற்றிருந்தது.இதில் இங்கிலாந்து அணி 3 பந்து வீச்சுக்கள் மீதமிருக்க 4 இலக்குகளினால் வெற்றியீட்டியது. இந்த நிலையில் தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வதற்கு வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் பாகிஸ்தானும், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விட முடியும் என்ற நிலையில் இங்கிலாந்து அணியும் நேற்றைய 3 ஆவது போட்டியில் மோதிக் கொண்டன.
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் புகுந்தனர். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 49 .4 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பாகிஸ்தான் அணி சார்பாக ஃபவேட் அலம் அதிக பட்சமாக 86 பந்துவீச்சுகளை எதிர்கொண்டு 3 நான்கு ஓட்டப் பெறுதிகள் அடங்கலாக 64 ஓட்டங்களைப் பெற்றார். எனினும் வேறு எந்தவொரு பாகிஸ்தான் அணி வீரர்களும் அரைச்சதம் பெறவில்லை. அஷாத் சபீக் 40 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக அன்டர்சன் 10 ஓவர்கள் பந்து வீசி இரண்டு ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 26 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுகளையும், டிம் ப்ரெஸ்ணன் 9 .4 ஓவர்கள் பந்து வீசி ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 51 ஓட்டங்ககளைக் கொடுத்து 3 விக்கட்டுகளையும் பதம் பார்த்தனர்.

இதன் படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 242 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்கின்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களம் புகுந்த இங்கிலாந்து அணியினர் 45 .4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 218 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இந்தப் போட்டியில் தோல்வியடைந்தனர். உண்மையில் இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி சார்பில் மோர்கன் (64 ), அன்று ஸ்ட்ரவுஸ் (57 ) ஆகியோர் அரைச்சதம் கடந்த போதிலும் ஏனைய வீரர்கள் பெரிதாக பிரகாசிக்காமையால் இங்கிலாந்தின் தோல்வி தவிர்க்க முடியாததாகி விட்டது. இதில் இங்கிலாந்து சார்பாக ரைட் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது..
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி சார்பாக உமர் குல் மிகவும் சிறப்பான பந்து வீச்சுப் பெறுதியை வெளிப்படுத்தியிருந்தார். 10 ஓவர்கள் பந்து வீசிய இவர் 42 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக் கொடுத்து 6 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார். மேலும் அப்துல் ரசாக் 7 .4 ஓவர்கள் பந்து வீசி 38 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.மேலும் பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் சிறப்பாக செயற்பட்ட உமர் குலத்தான் இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.உண்மையில் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 23 ஓட்டங்களினால் வெற்றி பெறுவதற்கு உமர் குல்லின் பந்து வீச்சுத்தான் காரணமாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாக இருக்காது.அந்த வகையில் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக தொடரை கைப்பற்றும் வாய்ப்பை பாகிஸ்தான் அணி தக்க வைத்துக் கொண்டது என்பதுடன் அடுத்து வருகின்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திலும் பாகிஸ்தான் அணி உள்ளது. பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதியும் ஐந்தாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறு இருக்க தென்னாபிரிக்காவில் நடை பெற்று வருகின்ற சம்பியன் லீக் இருபத்துக்கு-இருபது போட்டிகளில் நேற்றைய தினம் பங்களூர் ரோயல் மற்றும் தென் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டியில் 9 பந்து வீச்சுக்கள் மீதமிருக்க 8 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்ற நிலையில் இன்று சென்றல் டிஸ்ட்ரிக்-வார்ரியார்ஸ் அணிகள் மோதுகின்ற போட்டி ஒன்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ்-விக்டோரியா அணிகள் மோதுகின்ற போட்டி ஒன்றும் இடம்பெறவுள்ளது. இவை முறையே இந்த சம்பியன் லீக் போட்டிகளின் 12 ஆவது, 13 ஆவது போட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது.