உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Friday, August 31, 2012

பாகிஸ்தான் வெற்றி அவுஸ்திரேலியா தோல்வி..

மூன்று போட்டிகளைக் கொண்ட பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டியின் இரண்டாவது போட்டி  இன்று வெள்ளிக் கிழமை  நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணியானது 38 பந்து வீச்சுக்கள் மீதமிருக்க ஏழு இலக்குகளினால் வெற்றியீட்டியுள்ளது.. 

அபுதாபியில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணியானது முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் புகுந்தது. 

இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் ஒன்பது இலக்குகளை இழந்து அவுஸ்திரேலிய அணியால் 248 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. 

அவுஸ்திரேலிய அணி சார்பில் மைக்கல் ஹசி 61 ஓட்டங்களைப் பெற்றார். 
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் சஜித் அஜ்மல் நான்கு இலக்குகளையும், ஜுனைட் கான் மூன்று இலக்குகளையும் வீழ்த்தினர். 

பதிலுக்கு 50 ஓவர்களில் 249 ஓட்டங்கள் என்னும் வெற்றி இலக்குடன் களம்புகுந்த பாகிஸ்தான் அணியானது 43.4 ஓவர்கள் நிறைவில் மூன்று இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 

பாகிஸ்தான் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான நசீர் ஜெம்ஷேத் அபாரமாக செயற்பட்டு 97 ஓட்டங்களையும், அஸ்கர் அலி ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும் சேர்த்தனர். 
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பற்றின்சன், ஜோன்சன், கிறிஸ்டியான் ஆகியோர் தலா ஒவ்வொரு இலக்குகளை வீழ்த்தினர். 

இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த நசீர் ஜம்ஷேத் தெரிவு செய்யப்பட்டார். 

இவ்விரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றமையால் தொடர் 1 - 1 என உள்ள நிலையில் எதிர்வரும் 3 ஆம் திகதி சார்ஜாவில் நடைபெறவுள்ள மூன்றாவது போட்டி முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான்கு இலக்குகளினால் வென்றது இங்கிலாந்து.

இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்ற ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியானது பன்னிரண்டு பந்து வீச்சுக்கள் மீதமிருக்க நான்கு இலக்குகளினால் வெற்றியீட்டியுள்ளது. 

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணியானது ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகின்றது. இந்த தொடரின் மூன்றாவது போட்டியானது இன்றைய தினம் வெள்ளிக் கிழமை ஓவல் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. 

இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணியானது முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம்புகுந்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 46 .4 ஓவர்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 211 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. 

 தென்னாபிரிக்க அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஹசிம் அம்லா 43 ஓட்டங்களையும், எல்கர் 42 ஓட்டங்களையும் பெற்றனர்.



பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் 
அண்டர்சன் நான்கு இலக்குகளையும்,Dernbach மூன்று 
இலக்குகளையும், Tredwell  இரண்டு  இலக்குகளையும் 
வீழ்த்தினர்.


இதனைத் தொடர்ந்து 50 ஓவர்களில் 212 ஓட்டங்களை 
பெற்றுக் கொண்டால்
வெற்றி என்கின்ற இலக்குடன் துடுப்பெடுத்தாட 

களம் புகுந்த இங்கிலாந்து
அணியானது 48 ஓவர்கள் நிறைவில் 

ஆறு இலக்குகளை இழந்து வெற்றி
இலக்கினை அடைந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் இயன் மோர்கன் 73 
ஓட்டங்களையும், 
trott 71 ஓட்டங்களையும் சேர்த்தனர். 


பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் பீட்டர்சன் 

இரண்டு இலக்குகளை 
வீழ்த்தினார். 

மேலும் இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து 

அணி சார்பில்
துடுப்பாட்டத்தில் பிரகாசித்த இயன் மோர்கன் 

தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க
அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளைக் 

கொண்ட இந்த தொடரின்
முதலாவது போட்டி மழை காரணமாக முடிவு எட்டப்படாத 

நிலையில்
கைவிடப்பட்டதுடன் இரண்டாவது போட்டியில் 

தென்னாபிரிக்க அணியானது
80 ஓட்டங்களினால் வெற்றி பெற்றிருந்தது.

ஏற்கனவே தென்னாபிரிக்க அணியிடம் மூன்று 

போட்டிகளைக் கொண்ட
டெஸ்ட் தொடரை 2 - 0 என பறி கொடுத்த 

இங்கிலாந்து அணியானது
அடுத்து வருகின்ற இரண்டு போட்டிகளிலும் 

வெற்றி பெற்று தொடரை
கைப்பற்றுமா? அல்லது
தென்னாபிரிக்க அணி தனது சாதனைப் பயணத்தை 

தொடருமா?
பொறுத்திருந்து பார்க்கலாம்.

இவ்விரு அணிகளுக்குமிடையிலான 

நான்காவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி
எதிர்வரும் 2 ஆம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் 

நடைபெறவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

Sunday, August 26, 2012

அஷ்வினின் சுழலில் சுருண்டது நியுசிலாந்து.. இந்திய அணி அமோக வெற்றி..

இந்திய மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கடந்த 23 ஆம் திகதி வியாழக் கிழமை ஹைதராபாத் ராஜீவ் காந்தி விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. 

இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து முதலாவது  இனிங்க்ஸ்சிற்காக  களம் புகுந்தது.. இதன்படி முதலாவது இனிங்க்ஸ்சில் இந்திய அணியானது 134.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 438 ஓட்டங்களை பெற்றது. 

இந்திய அணிசார்பில் புஜாரா மிகவும் சிறப்பாக செயற்பட்டு 159 ஓட்டங்களையும், அணித்தலைவர் டோனி 73 , விராட் கோலி 58 ஓட்டங்களையும் சேர்த்தனர். 


பந்து வீச்சில் நியுசிலாந்து அணி சார்பில் patel 4 இலக்குகளையும், Boult 3 இலக்குகளையும் வீழ்த்தினர். 

இதனைத் தொடர்ந்து முதலாவது இனிங்க்ஸ்சில் துடுப்பெடுத்தாட களம் புகுந்த நியுசிலாந்து அணியானது 61.3 ஓவர்கள் நிறைவில் 159 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. நியுசிலாந்து அணிசார்பில் franklin ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களை பெற்றார். 
இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் அஷ்வின் 6 இலக்குகளையும், ஓஜா 3 இலக்குகளையும் வீழ்த்தினர். 

முதலாவது இனிங்க்ஸ்சில் நியுசிலாந்து அணி பெற்றுக் கொண்ட ஓட்டங்கள் குறைவாக இருந்தமையால் இரண்டாவது இனிங்க்ஸ் ஐ ஆரம்பித்த நியுசிலாந்து அணியானது இரண்டாவது இனிங்க்ஸ்சில் 79 .5 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 164 ஓட்டங்களை மாத்திரமே சேர்த்தது. நியுசிலாந்து அணி சார்பில் இரண்டாவது இனிங்க்ஸ் சில் வில்லியம்சன் 52 ஓட்டங்களையும், மக்கலம் 42 ஓட்டங்களையும் பெற்றனர். 

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் இரண்டாவது இனிங்க்ஸ்சிலும் அஷ்வின் 6 இலக்குகளையும், ஓஜா 3 இலக்குகளையும் பதம்பார்த்தனர். 
அந்த வகையில் இந்திய மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தின்  போது  இந்திய அணியானது ஒரு  இனிங்க்ஸ்சாலும்  115 ஓட்டங்களினாலும் வெற்றியீட்டி சாதனை படைத்துள்ளது. 

இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணி சார்பில் இரண்டு இனிங்க்சிலும் தலா 6 இலக்குகள் வீதம் இந்தப் போட்டியில் மொத்தம் 12 இலக்குகளை பதம்பார்த்த தமிழக வீரரான அஷ்வின் தெரிவு செய்யப்பட்டார். 
மேலும் இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பில் முதலாவது இனிங்க்சில் புஜாரா பெற்றுக் கொண்ட 159  ஓட்டங்களானது  டெஸ்ட் போட்டி ஒன்றில் அவரது அதிகூடிய ஓட்டப் பெறுதி என்பதுடன் டெஸ்ட் போட்டியில் அவரின்  கன்னிச்  சதம் என்பதும் முக்கியமான விடயமாகும். இதற்கு முன்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு அக்டோபரில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் பெற்றுக் கொண்ட 72 ஓட்டங்களே அவரது அதிகூடிய ஓட்டங்களாக பதிவாகியிருந்தது. இது வரை மொத்தமாக 4 டெஸ்ட் போடிகளில் விளையாடியுள்ள புஜாரா 6 இனிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி   ஒரு சதம், ஒரு அரைச் சதம்  அடங்கலாக மொத்தமாக 266 ஓட்டங்களை சேர்த்துள்ளார். 
இந்திய மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 31 ஆம் திகதி வெள்ளிக் கிழமை பெங்களுர் சின்னச்சுவாமி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன் இவ்விரு அணிகளும் இரண்டு 20 - 20 போட்டிகளிலும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sunday, August 12, 2012

ஓய்ந்தது ஒலிம்பிக் திருவிழா 2012..

கடந்த 27 ஆம் திகதி லண்டனில் பல்வேறு பாதுகாப்பு நெருக்கடிகள், விமர்சனங்களுக்கு மத்தியில் கோலாகலமாக தொடங்கிய ஒலிம்பிக்  2012 சற்று முன்னர் அதே கோலாகலங்களுடன் நிறைவடைந்துள்ளது. நிறைவடைந்துள்ளது. இம்முறை ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா 46 தங்கம், 29 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தமாக 104 பதக்கங்களுடன் முதலிடத்தையும், சீன மக்கள் குடியரசு 38 தங்கம், 27 வெள்ளி, 22  வெண்கலம் என மொத்தமாக 87 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும், பிரித்தானியா 29 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தமாக 65 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தது.

  பதக்க பட்டியல்.


Rank by Gold     Country                   Gold      Silver     Bronze  Total

1             United States of America      46           29           29           104
2             People's Republic of China   38           27           22           87
3             Great Britain                             29           17           19           65
4             Russian Federation                24           25           33           82
5             Republic of Korea                   13           8              7              28
6             Germany                                    11           19           14           44
7             France                                        11           11           12           34
8             Italy                                            8              9              11           28
9             Hungary                                     8              4              5              17
10          Australia                                      7              16           12           35
11          Japan                                            7              14           17           38
12          Kazakhstan                                 7              1              5              13
13          Netherlands                                6              6              8              20
14          Ukraine                                        6              5              9              20
15          Cuba                                            5              3              6              14
16          New Zealand                              5              3              5              13
17          Islamic Republic of Iran            4              5              3              12
18          Jamaica                                       4              4              4              12
19          Czech Republic                          4              3              3              10
20 Democratic People's Republic of Korea4              0              2              6
21          Spain                                           3              10           4              17
22          Brazil                                           3              5              9              17
23          Belarus                                        3              5              5              13
24          South Africa                               3              2              1              6
25          Ethiopia                                       3              1              3              7
26          Croatia                                         3              1              2              6
27          Romania                                       2              5              2              9
28          Kenya                                          2              4              5              11
29          Denmark                                      2              4              3              9
30          Azerbaijan                                   2              2              6              10
30          Poland                                          2              2              6              10
32          Turkey                                         2              2              1              5
33          Switzerland                                 2              2              0              4
34          Lithuania                                    2              1              2              5
35          Norway                                       2              1              1              4
36          Canada                                        1              5              12           18
37          Sweden                                       1              4              3              8
38          Colombia                                    1              3              4              8
39          Georgia                                       1              3              3              7
39          Mexico                                        1              3              3              7
41          Ireland                                         1              1              3              5
42          Argentina                                    1              1              2              4
42          Slovenia                                       1              1              2              4
42          Serbia                                           1              1              2              4
45          Tunisia                                        1              1              1              3
46          Dominican Republic                  1              1              0              2
47          Trinidad and Tobago                1              0              3              4
47          Uzbekistan                                  1              0              3              4
49          Latvia                                           1              0              1              2
50          Algeria                                         1              0              0              1
50          Bahamas                                      1              0              0              1
50          Grenada                                        1              0              0              1
50          Uganda                                         1              0              0              1
50          Venezuela                                     1              0              0              1
55          India                                              0              2              4              6
56          Mongolia                                      0              2              3              5
57          Thailand                                        0              2              1              3
58          Egypt                                             0              2              0              2
59          Slovakia                                         0              1              3              4
60          Armenia                                          0              1              2              3
60          Belgium                                           0              1              2              3
60          Finland                                            0              1              2              3
63          Bulgaria                                          0              1              1              2
63          Estonia                                           0              1              1              2
63          Indonesia                                      0              1              1              2
63          Malaysia                                        0              1              1              2
63          Puerto Rico                                   0              1              1              2
63          Taipei (Chinese Taipei)               0              1              1              2
69          Botswana                                      0              1              0              1
69          Cyprus                                           0              1              0              1
69          Gabon                                            0              1              0              1
69          Guatemala                                     0              1              0              1
69          Montenegro                                 0              1              0              1
69          Portugal                                        0              1              0              1
75          Greece                                           0              0              2              2
75          Republic of Moldova                  0              0              2              2
75          Qatar                                              0              0              2              2
75          Singapore                                      0              0              2              2
79          Afghanistan                                 0              0              1              1
79          Bahrain                                         0              0              1              1
79          Hong Kong, China                      0              0              1              1
79          Saudi Arabia                                0              0              1              1
79          Kuwait                                           0              0              1              1
79          Morocco                                       0              0              1              1
79          Tajikistan                                      0              0              1              1