உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Friday, July 10, 2009

காதல் கவிதைகளும் நானும்...



எனக்கு கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் இருந்து ஒரு சின்ன கவலை. அதாவது வழ்க்கமாக கவிதைகளை எழுதுவதில் அதீத ஆர்வம் என்னுள் இருந்தாலும் கொஞ்சம் புரட்சிகரமான கவிதைகளை எழுதுவதே எனக்கு எப்போதும் சாத்தியமாவதுண்டு. மாறாக காதல் கவிதைகளை எழுதுவது சாத்தியப்படுவது குறைவு. (நான் எழுதுவது கவிதைகள்தானா...????)

இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தபோது ஆரோக்கியமான பதில் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
ஆனால் உண்மையை மட்டுமே எழுதவேண்டுமென நினைப்பது இந்த காதல் கவிதைகளை எழுதுவதை தடுக்கிறதோ என்று நினைப்பதுண்டு..
இப்படியான என்னால் எழுதப்பட்ட ஒரு சில காதல் கவிதைகளை இன்று பதிகின்றேன். பார்த்துவிட்டு உங்கள் பின்னூட்டல்களையும் இட்டுவிடுங்கள்....

என் இனியவளே...







உலக தரிசனத்தில் நீ ஓர்
உயிர்கொண்ட ஓவியம்.
வாழ்வின் எல்லை வரை
வார்த்தைக்காற்றும் வாழ்க நீ என்று
வாயார வாழ்த்தும்.
உன் நினைவு மறந்து தனியாய் நடந்தால்
என் நிழாலே என்னைவிட்டு விலகிவிடும்.
நீ என் பயணத்தில் எல்லாம்
கூடவே வருகிறாய்.

என் இனியவளே,
நீ என் இதயத்தில் அல்ல
உதிரத்தில் உறைந்திருக்கிறாய்.
அதனால்தான் உதிரத்தில்
உறைந்துள்ள உனக்காக
என் இதயம்
இன்றுவரை இடைவிடாது துடிக்கிறது.
இடைவேளை இல்லா இந்த இயந்திர வாழ்வில்
நிமிடக்காற்றும் நித்தம் நித்தம்
உன் பெயரை சத்த சஞ்சலமின்றி உச்சரிக்கிறது.

அன்பே,
நீ பேசிய வார்த்தைகள்
நினைவுப்பொக்கிஷங்களாய் உள்ளத்து நூலகத்தில்
உயரிய ஏடுகளில் பாதுகாக்கப்படுகின்றன.
புத்தம் புதிய அந்த புத்தகங்களின்
வாசகன் நான் மட்டும்தான்.
நிறைந்த அந்த நினைவுப்பூங்க்காவில்
மலர்ந்திருக்கும் மலர்கள்
வாடா வரம்பெற்றவை.
வாழ்வின் எல்லைவரை
அவை வாசம் வீசிக்கொண்டேயிருக்கும்.


மெளனம் கலைத்துவிடு..!




தேவதையே உன்னை தேடிவந்தேன்,
காதல் என்னும் ராகம் பாடி வந்தேன்
நீ மட்டும் என்முன்னே
என்றும் மெளனமாய் ஏன்?
அன்பே, உன்னை அடைய
ஆர்ப்பரிக்கும் அலைகடல் நடுவே
ஆயிரம் படகுகளில் தத்தளித்து
கரை சேர்ந்து
காதல் மொழி பேச காத்திருக்கிறேன்,
கலைத்துவிடு உன் மெளனத்தை,
இல்லையேல்,
இங்கொரு இதயம் சடப்பொருளாகி சுடச்சுட எரியும்.....



சூரியன் இல்லாத பூமியாக...
உறங்கும்போதும்
உன் நினைவுகள் உறங்குவதில்லை,
ஏனெனில் நீ என் உண்மைக்காதலி.
உன் விம்பம்
என் விழித்திரைக்கு ஒளியூட்டும்
அழாகான வைப்பகப்படம்.

பெண்ணே,
நீ என்
அன்பான அழாகான உள்ளக்காதலி.
உள்ளத்துடிப்பு நின்று உயிர்பிரியும்வரை
உன் நினைவுகள் அழியாது,
இது உறுதி.

அன்பே,
மறப்பதற்கு நீ
உன் நினைவுகளை மட்டுமா என்னிடம் தந்தாய்?
இல்லையே,
உன் உள்ளத்தையல்லவா தந்திருக்கிறாய்..
தந்த உன் உள்ளத்தை தொலைத்துவிடால்
இந்த உலகில் எனக்கு என்ன வேலை.

மங்கையே,
அன்பை ஆட்சிசெய்யும்
உண்மையான உன்னை மறந்தால்
உலகில் எனக்கென எஞ்சும் உள்ளம்
சூரியன் இல்லாத சூனிய பூமியைப்போல
மணித்துளிகள் ஒவ்வொன்றும்
மரணத்தை நோக்கி பயணிக்கும்.

1 comment:

Thana Luxmy said...

ஒவ்வொரு வரிகளும் அருமையாக உள்ளது...தொடருங்கள் உங்கள் கவிப்பயணத்தை...வாழ்த்துக்கள்.