உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Wednesday, August 26, 2009

இருபத்தைந்தாவது பதிவில் இதயம் திறக்கிறேன்....!!!!!!


இது எனது வலைப்பூவில் பதிவாகும் 26ஆவது பதிவு. ஆனால் எனது சொந்தப் பதிவென்று பார்த்தால் இது 25ஆவது பதிவு. பொதுவாக 25ஆவது பதிவை எழுதும்போது பலரும் தங்கள் பதிவுலக அனுபவங்களையும், அடுத்து வரப்போகும் தங்கள் பதிவுகளின் போக்குகள் தொடர்பிலும் சொல்வதுண்டு.
அந்தவகையில் மிகவும் குறுகிய அனுபவமுடைய நானும் எனது சின்னச் சின்ன அனுபவங்களையும் எதிர்காலத் திட்டங்களையும் இந்தப் பதிவின் வழியே சுருக்கமாக தருகின்றேன்.....
உண்மையில் நான் கடந்த மே மாதத்தில் இந்த வலைப்பூவை ஒரு விளையாட்டாகத்தான் ஆரம்பித்திருந்தேன். அப்போது வலைப் பூ தொடர்பான தொழில் நுட்ப அறிவோ, வேறு வலைப் பதிவாளர்களுடனான தொடர்புகளோ இருக்கவில்லை.
மேலும் வலைப்பூக்களை வாசிப்பதும், பின்னூட்டங்களை இடுவதும் அப்போது குறைவு அல்லது இல்லை என்று சொல்லலாம். அப்படியான ஒரு சூழலில்தான் இந்த வலைப் பூவை ஒரு மின்னஞ்சலை உருவாக்குவது போன்ற உணர்வுடன் ஆரம்பித்தேன்...
ஆரம்பித்ததன் பின்னர் இதில் என்னென்ன விடயங்களை இடுவது என்று சிந்தித்து முதலில் வேறு வலைத்தளங்களில் வெளியாகும் முக்கியமான செய்திகளை பிரதிபண்ணி வெளியிட்டு பரீட்சித்துப் பார்த்தேன்... ஆனாலும் அது ஆபத்தில் முடியுமோ என எண்ணி அவற்றை நீக்கிவிட்டு சினிமா சம்பந்தமான தகவல்கள் சிலவற்றை பிரதிபண்ணி வெளியிட்டேன்.
எனினும் அதுவும் திருப்திகரமாக அமையாமையால் அவற்றை எல்லாம் நீக்கிவிட்டு விளையாட்டாக கடந்த மே மாதம் 19ஆம் திகதி, அன்று பெரும்பாலானவர்கள் மத்தியில் இருந்த குழப்பத்தை அடிப்படையாகக் கொண்டு "இப்போதுள்ள குழப்பம்" எனற தலைப்பில் எனது முதலாவது சொந்தப் பதிவை பதிந்தேன்...
உண்மையில் இந்தப் பதிவை முழுமையாக்கிய பின்னர் எனது மனதில் ஒரு இனம்புரியாத திருப்தி உருவானது. அத்துடன் அந்தப் பதிவு கணினிக்கு முன்னால் அமர்ந்திருந்து யோசித்து, யோசித்து தட்டச்சு செய்த பதிவு. ஏற்கனவே எழுதவுமில்லை, தயார்ப்படுத்தவுமில்லை. அதாவது அது ஒரு திடீர் பதிவு. (இப்போதும் பெரும்பாலான பதிவுகள் அப்படித்தான் என்றாலும் கொஞ்சம் குறிப்பெடுத்துக் கொள்வதுண்டு.)
இப்படியாக எனது ஆரம்பப் பதிவே ஒரு அரசியல் பதிவாக அமைய அடுத்து எனது வலைப்பூவில் என்னென்ன விடயங்களை எல்லாம் பதியலாம் என்று சிந்தித்தபோது, சில முகப்புத்தக நட்புக்களும், இன்னும் சில நேரடி, தொலைபேசி நட்புக்களும் இதனை ஒரு பல்சுவை அம்சங்களிற்கான வலையாக பேணுமாறு கூறினார்கள்.
ஆனாலும் எனக்கு இதனை ஒரு அரசியல் கட்டுரைகளுக்கான களமாக பேணும் எண்ணமே இருந்தது. எனினும் தொடர் அரசியல் பதிவுகளின் ஆபத்தினை கருத்தில்க் கொண்டு எனது நட்பு உள்ளங்களின் ஆலோசனைப்படி பல்சுவை அம்சங்களிற்கான வலைத்தளமாக பதிவுகளை பதிய எண்ணி, அடுத்ததாக எனக்கும் எனது ஆருயிர் நண்பனுக்கும் (நண்பன் யுத்தத்தின் பிடிக்குள் சிக்கி உயிரிழந்துவிட்டான்) இடையில் நடந்த சுவையான விவாதம் ஒன்றை "கடவுள் உள்ளாரா?? இல்லையா???" என்ற தலைப்பில் பதிந்தேன்...
அதனைத்தொடர்ந்து "இயக்குனர்" என்ற தலைப்பில் கையிருப்பில் இருந்த ஒரு கவிதையென்று பதிவுகள் தொடர்ந்து இப்போது 25ஆவது சொந்தப் பதிவை பதிந்துகொண்டிருக்கின்றேன்.... (எனது வலைப் பூவில் வணக்கப் பதிவோ அல்லது விளக்கப் பதிவோ இல்லாமை இது ஒரு விளையாட்டாக ஆரம்பிக்கப்பட்ட திட்டமிடப்படாத வலைப்பூ என்பதற்கு ஆதாரமாக இருக்கும்...)
மேலும் நான் வலைப் பூவை ஆரம்பித்த மே மாதத்தில் மட்டும் மொத்தமாக 05 பதிவுகளை பதிந்திருந்தேன். அடுத்து ஜூன் மாதத்தில் 06பதிவுகள் ஜூலையில் 07பதிவுகள் என்று மாதம் ஒவ்வொரு பதிவுகளாக அதிகரித்திச் செல்வதே நோக்கமாக இருந்தது... இதுவரை அதை செய்யவும் முடிந்துள்ளது... அத்துடன் எனது பதிவுகளையும், படைப்புக்களையும் காத்திரமானவையாக்குவதுடன், அவற்றை பலரிடம் கொண்டு சேர்க்கின்ற தேவையும் உள்ளது...
அதுமட்டுமன்றி இனிவருங்காலங்களில் ஏனைய அனுபவஸ்தர்களின் வலைப்பூக்களை அதிகம் வாசித்து அவற்றுக்கு பின்னூட்டங்களை வழங்குவதுடன், தொழில் நுட்ப விடயங்களையும் கற்றறிந்து கொள்ளவேண்டியுள்ளது... உண்மையில் எந்தவித முன் அனுபவமும் இல்லாமல், வலைப்பூக்களை அதிகம் வாசிக்காமல், பின்னூட்டமிடாமல், தொழில் நுட்ப விடயங்களை அறிந்துகொள்ளாமல் உள்நுழைந்த எனக்கு மேற்படி விடயங்களை நடைமுறைப் படுத்துவது மிக மிக அவசியமான ஒன்று...
மேலும் புதிதாக வலைப்பதிவுகளை ஆரம்பிப்பவர்களின் வலைத்தளங்களை வாசித்து பின்னூட்டங்களால் உற்சாகப்படுத்த வேண்டுமென்கின்ற அதீத ஆர்வத்தில் உள்ளதுடன், எனது பதிவுகள் யார் மனதையும் புண்படுத்தாமல் அமைய வேண்டுமென்பதிலும் உறுதியாக உள்ளேன்...
உங்கள் அன்பும், ஆதரவும் துணையிருக்க எனது பயணம் இன்னும் தொடரும்.... உற்சாகப் படுத்தும் உள்ளங்களுக்கும், வலைத்தளத்திற்கு வரும் வாசகர்களுக்கும், ஆலோசனைகளை தரும் அன்பர்களுக்கும், உதவி புரியும் உறவுகளுக்கும் உள்ளத்தால் உண்மையான நன்றிகள்....

14 comments:

Unknown said...

வாழ்த்துக்கள் நண்பரே!! உமது கற்பனைகளும் எழுத்து ஆற்றலும் அருமை! உமது நற்பணி தொடர எனது வாழ்த்துக்கள்

மயில்வாகனம் செந்தூரன். said...

s.y.guru said...
////வாழ்த்துக்கள் நண்பரே!!////
உங்கள் அன்பும் ஆதரவும் உற்சாகம் தருகின்றது....

வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் இதயத்தால் இனிய நன்றிகள்....

அடிக்கடி வாருங்கள்....

Admin said...

25 வது இடுகைக்கு வாழ்த்துக்கள் உங்களிடம் இருந்து இன்னும் எதிர் பார்க்கிறோம் தொடர்ந்து எழுதுங்கள்.

சப்ராஸ் அபூ பக்கர் said...

வாழ்த்துக்கள் செந்தூ..... வெகு சீக்கிரம் சதம் அடிப்பீர்கள்.....

இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம் உங்களிடமிருந்து......

Unknown said...

உங்க வலைப்பதிவுக்கு அதிக ஹிட்ஸ் வேண்டுமா அப்போ உங்க பதிவுகளை tamil10.com தளத்தில் இணையுங்கள் .பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கி தளத்திற்குச் செல்லுங்கள்

யோ வொய்ஸ் (யோகா) said...

வாழ்த்தக்கள் நாங்க எல்லாரும் உங்களை போல வேடிக்கையாக தான் இந்த வலைபதிவு தொடங்கியிருக்கோம்.

மயில்வாகனம் செந்தூரன். said...

சந்ரு said...

////25 வது இடுகைக்கு வாழ்த்துக்கள்////

உங்கள் வாழ்த்துக்கள் உற்சாகம் தருகின்றது...

////தொடர்ந்து எழுதுங்கள்.////

உங்கள் அன்பும் ஆதரவும் துணையிருக்கும் வரை.....

அடிக்கடி வாருங்கள்...
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் இதயத்தால் இனிய நன்றிகள்....

மயில்வாகனம் செந்தூரன். said...

சப்ராஸ் அபூ பக்கர் said...

////வாழ்த்துக்கள் செந்தூ..... ////
நன்றி நண்பா...
நான் இதில் ஒரு கற்றுக்குட்டி....
உங்கள் ஆலோசனைகளும் கருத்துக்களும் அவசியம்...

அடிக்கடி வாருங்கள் அபூ...

மயில்வாகனம் செந்தூரன். said...

தமிழினி said...

நன்றி...

மயில்வாகனம் செந்தூரன். said...

யோ வாய்ஸ் said...
/
///வாழ்த்தக்கள்////
உங்கள் வாழ்த்துக்கள் உற்சாகம் தருகின்றது....

////நாங்க எல்லாரும் உங்களை போல வேடிக்கையாக தான் இந்த வலைபதிவு தொடங்கியிருக்கோம்.////

உண்மையாகவே சந்தோசமாக இருக்கின்றது...
ஆனால் நான் இதில் ஒரு கற்றுக்குட்டி...
நிறைய ஆலோசனைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்...

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் இதயத்தால் இனிய நன்றிகள்...
அடிக்கடி வாருங்கள்....

வேந்தன் said...

25வது இடுகைக்கு வாழ்த்துக்கள். :)

மயில்வாகனம் செந்தூரன். said...

வேந்தன் said...

////25வது இடுகைக்கு வாழ்த்துக்கள்.////

உங்கள் வாழ்த்துக்கள் உற்சாகம் தருகின்றது...

வாழ்த்துக்களுக்கும், வருக்கைக்கும் இதயத்தால் இனிய நன்றிகள்...

அடிக்கடி வாருங்கள்...

தர்ஷா said...

25வது இடுகைக்கு வாழ்த்துக்கள்

tharsha

மயில்வாகனம் செந்தூரன். said...

Tharsini said...

////25வது இடுகைக்கு வாழ்த்துக்கள்.////

உங்கள் வாழ்த்துக்கள் உற்சாகம் தருகின்றது...

வாழ்த்துக்களுக்கும், வருக்கைக்கும் இதயத்தால் இனிய நன்றிகள்...

அடிக்கடி வாருங்கள்...

(தர்ஷா தமிழில் தட்டச்சு செய்ய இதனை பயன்படுத்தலாம்.
www.google.co.in/transliterate/indic/Tamil)