உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Saturday, November 10, 2012

வெற்றி fm சிலரிடம் சில கேள்விகள்..

அண்மைக் காலமாக இலங்கை ஊடகத்துறை தொடர்பில் எனக்கு தெரிந்த விடயங்களையும், நான் தேடி எடுத்துக் கொண்ட சில விடயங்களையும் தொகுத்து ஒரு நீண்ட பதிவினை இடவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. எனினும் இலங்கையில் இந்த துறையுடன் தொடர்புபட்ட சிரேஷ்டமானவர்களுடன் கலந்துரையாடாமல், அவர்களின் ஒப்புதல் இன்றி அவ்வாறான ஒரு பதிவினை இடுவதற்கு மனம் இடங்க்கொடுக்காமையால் அந்த திட்டத்தை கொஞ்சம் தள்ளி வைத்துள்ள நிலையில் இலங்கை பண்பலையில் பிந்திய வரவாக இருந்தும் பல நேயர்களின் அபிமானத்தை குறுகிய காலத்தில் பெற்றுக் கொண்ட வெற்றி fm வானொலியில் அதன் வெற்றிக்காக உழைத்த அறிவிப்பாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் அதன் பின்னரான சிலரின் நடைவடிக்கைகள் இந்த பதிவை எழுதுவதற்கு தூண்டியுள்ளது.

இந்த பதிவின் மூலமாக நான் கொஞ்சம் வெளிப்படையாகவே பேச விரும்புவதால் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் எல்லாம் இதில் குறிப்பிடப்படுவதுடன், சிலரை நோக்கி சில கேள்விகளையும் கேட்க விரும்புகின்றேன். எனவே குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்புபவர்கள் பின்னூட்டம் வாயிலாக பதிலளிக்கலாம். மேலும் இதில் சிலரை விமர்சிப்பதால் அவர்களின் அபிமானிகள், ஆதரவாளர்கள் ஆத்திரமடையலாம் என்பதும் எனக்கு நன்கு தெரியும். இருந்தும் இப்போது இந்தப்பதிவு வெற்றி fm தொடர்பான விடயங்களையும், அதனுடன் தொடர்புபட்ட ஊடகத்துறை சார்ந்த விடயங்களையும் அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பவர்களுக்கு உதவும் என்பதால் இந்தப்பதிவு இந்த நேரத்தில் பொருத்தமானதாக இருக்கும் என நம்புகின்றேன்.

இலங்கையை பொறுத்தவரையில் ஊடகத் துறையில் பணிபுரிவோர் அதிலும் குறிப்பாக வானொலித்துறையில் பணி புரிவோர் இந்திய சினிமா நட்சத்திரங்களைப் போல பார்க்கப்படுகின்றார்கள். இதனால்தானோ என்னவோ இலங்கையின் பலபாகங்களிலுமிருந்து ஏராளமான இளைஞர், யுவதிகள் அறிவிப்பாளராக வேண்டும் என்ற கனவுடன் தலைநகர் கொழும்பை நோக்கி படை எடுக்கின்றார்கள். இவர்களின் இந்த அதீத ஆர்வத்தை கடந்த காலங்களில் சில நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஊதியம் எதுவுமில்லாமல் இவர்கள் உழைப்பால் தங்கள் வானொலியை வளர்த்துக்கொண்ட வரலாறுகளும் உண்டு. 

என்ன நோக்கத்துக்காக ஒரு வானொலியை உருவாக்குகின்றோம் என்ற தெளிவான சிந்தனைகளும், நீண்டகால திட்டமிடல்களும் இல்லாமையினாலையே சில நிறுவனங்கள் இவ்வாறான நிலைக்குள் தள்ளப்படுகின்றன. இன்னும் சில நிறுவனங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஊதியமில்லாமல் உழைப்பை கறக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றன. ஊடக நிறுவனங்களின் இந்த பின்புலம், குழப்பங்கள் முகநூல், டுவிட்டர் போன்ற சமூக இணையத்தளங்கள் பிரபலமடையாத காலத்தில் வெளியில் இருப்பவர்களுக்கு சென்றடைவதில்லை. இருப்பினும் நடந்தது என்ன என்பதை அறிந்து கொள்வதில் நேயர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இப்போது சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி நேயர்களின் இந்த ஆர்வப் பசிக்கு தீனி போடும் வகையில் அமைந்துள்ளது. 

அதிலும் குறிப்பாக வெற்றி fm வானொலி அறிவிப்பாளர் குழுவிற்கு இழைக்கப்பட்ட அநீதி மிக இலகுவாக எல்லோரையும் சென்றடைந்துள்ளது. ஆனாலும் துன்பப்பட வேண்டிய ஒரு விடயத்தில் பல வேடிக்கைகளையும், விநோதங்களையும் பார்க்க முடிவது என்னவோ வருத்தம்தான். 

வெற்றி fm நடந்தது, நடப்பவை என்ன?

வெற்றி fm வானொலியில் லோஷன் அண்ணா தலைமையிலான அறிவிப்பாளர் குழாமிற்கு இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமையால் அதனை தட்டிக் கேட்ட அவர்களுடன் வெற்றி fm நிர்வாகம் மிகவும் மோசமாக நடந்துகொண்டமையும் பின்னர் அவர்கள் பணிப் புறக்கணிப்புக்கு செல்லும் நிலை ஏற்பட்டதும் இதன் தொடர்ச்சியாக அவர்களை வெற்றி fm நிறுவனம் பணி நிறுத்தம் செய்தமையும் பலருக்கும் தெரிந்த விடயம். 

இதனால் வெற்றியில் தொடர்ந்து பாடல்கள் மட்டுமே ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க வெற்றி fm ஆரம்பித்த காலத்திலிருந்து  வெற்றியுடன் இணைந்திருந்த ஹிஷாம் முகமட் தனது தலைமையில் வெற்றியில் நிகழ்ச்சிகளை ஆரம்பிக்க முயற்சித்தும் இறுதியில் அவரது எதிர்பார்ப்பு தவிடுபொடியாகி வெற்றியின் புதிய நிர்வாகியாக சூரியனின் முன்னாள் நிகழ்ச்சி முகாமையாளர்களில் ஒருவரும், கும்மாளம் நிகழ்ச்சியினை சூரியனில் படைத்தவருமான பரணிதரன் தெரிவு செய்யப்பட்டு இப்போது அவரின் தலைமையில் நிகழ்ச்சிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த இடத்தில் சில நியாயமான கேள்விகளை வெற்றி fm ஐ வழிநடத்தும் நிறுவனத்திடமும் அதன் புதிய நிர்வாகியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பரணி அண்ணாவிடமும், ஹிஷாம் முஹமட்டிடமும், இன்னும் சிலரிடமும் கேட்பது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

வெற்றி fm ஐ வழி நடத்தும் நிறுவனத்திடம் சில கேள்விகள்.

01- உங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த அறிவிப்பாளர் குழாமிற்கு எதற்காக இரண்டு மாத ஊதியத்தை கொடுக்காமல் மறுத்தீர்கள்?

02- ஊதியம் கேட்ட ஊழியர்களை எதற்காக மோசமாக நடத்தினீர்கள்?

03- ஊதியம் கேட்ட ஊழியர்களுடன் சமரசம் எதுவுமில்லாமல் எதன் அடிப்படையில் புதிய குழுவை அமைக்க முடிவு செய்தீர்கள்?

04- நியமிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிக்கும், அவர் தலைமையிலான அறிவிப்பாளர்களுக்குமாவது ஒழுங்காக ஊதியம் வழங்கப்படுமா? அல்லது புதிய நிர்வாகியையும், வானொலித் துறையில் ஆர்வத்துடன் வரும் இளைஞர் யுவதிகளையும் உங்கள் நிறுவன வளர்ச்சிக்காக பலிக்கடாவாக்க போகின்றீர்களா?

வெற்றி fm வானொலியின் புதிய நிர்வாகியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பரணி அண்ணாவிடம் சில கேள்விகள்..

01- நீங்கள் சூரியனிலிருந்து லோஷன் அண்ணா மற்றும் அறிவிப்பாளர்கள் விலகிச் சென்று வெற்றியில் இணையும் போது சூரியனில் நிலைத்திருந்தது ஏதேனும் பதவிகளை எதிர்பார்த்தா?

02- பல சந்தர்ப்பங்களில் பல அறிவிப்பாளர்களும் கடந்தகாலங்களில் இடம் மாறியதுண்டு. எனினும் தொழிலாளிகளின் ஊதியம் மறுக்கப்பட்டு அவர்கள் ஒட்டுமொத்தமாக பணிப் புறக்கணிப்பு செய்யும் போது இன்னுமொரு தொழிலாளியான நீங்கள் குறித்த நிறுவனத்தில் இணைந்தது தொழிலாளர் வர்க்கத்தை காட்டிக் கொடுத்ததாக அமையாதா? மேலும் ஊதியம் வழங்காத ஒரு நிறுவனத்தில் வெறும் பதவிக்காகவா இணைந்துகொண்டீர்கள்?

ஹிஷாம் முஹமட்டிடம் சில கேள்விகள்..

01- ஒட்டு மொத்த அறிவிப்பாளர்களுக்கும் ஊதியம் வழங்கப்படாத போது உங்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கப்பட்டது என்றா பணிப் புறக்கணிப்பில் ஒத்துழைக்காமல் இருந்தீர்கள்? 

02- தொழிலாளிகள் எல்லாம் பணிப் புறக்கணிப்பு செய்யும்போது நீங்கள் மட்டும் முதலாளிக்கு வால் பிடித்தது தொழிலாளிகளை காட்டிக் கொடுக்கும் செயற்பாடு என்பது உங்களுக்கு தெரியாதா?

03- நீங்கள்தான் வெற்றியை ஆரம்பிக்கும் போது இணைந்த முதலாவது அறிவிப்பாளர் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் உங்களுக்கு போதுமான அனுபவம் இல்லாமையால்தான் லோஷன் அண்ணாவை வெற்றி ஆரம்பித்த காலத்தில் நிர்வாகியாக அழைத்திருந்தார்கள். உங்களுக்கு வெற்றி ஆரம்பித்த காலத்தில் இணைந்து கொண்ட முதலாவது அறிவிப்பாளர் என்னும் அடிப்படையில் உதவி நிர்வாகி பதவி கிடைத்ததும் நமக்கு தெரியும். இந்த நிலையில் நீங்கள் நிர்வாகிப் பதவி ஆசைக்காகத்தான் எல்லோரும் பணிப் புறக்கணிப்பு செய்யும் போது முதலாளித்துவத்துடன் ஒட்டிக் கொண்டிருந்தீர்கள் என்று நாங்கள் சொன்னால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

வெற்றியுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டவர்கள் மட்டும்தான் தங்கள் முக நூல் வாயிலாகவும், டுவிட்டர் வாயிலாகவும் இந்த பிரச்சினை பற்றி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்களா என்றால் வெற்றியுடன் கொஞ்சமும் தொடர்புபடாத சில ஊடகத்துறையுடன் தொடர்புபட்டவர்களும் தங்கள் கடந்தகால தனிமனித விருப்பு வெறுப்புக்களுக்காக இந்த சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டிருப்பதையும் காண முடிகின்றது. 

குறிப்பாக முன்பு சூரியனில் நேற்றைய காற்று என்னும் நிகழ்ச்சியை படைத்த மப்ரூக் தனது முக நூலில் காகம், கிளை, கூடு என்று ஏதோ சொல்லவருகின்றார்.
இவர் என்ன சொல்லவருகின்றார்....?

மப்ரூக்கிடம் சில கேள்விகள்..

01- உங்களுக்கு சூரியனையும், சக்தியையும் விட்டால் வேற ஒன்றும் தெரியாமல் இருந்த காலத்தில்தான் வெற்றி உருவானது என்பது மறந்துவிட்டதா?
மேலும் எவனோ உருவாக்கிய ஒரு வானொலியில் அறிவிப்பாளனாய் மட்டும் இருந்த உங்களுக்கு ஒரு வானொலியை உருவாக்கி வெற்றியடைய செய்யும் ஆளுமையில்லை என்பதும், உங்களை போன்றவர்கள் வெறும் வார்த்தை ஜாலங்களில்தான் வல்லவர்கள் என்பதும் நமக்கு தெரியாத ஒன்றா என்ன?

02- நீங்கள் உங்கள் பதிவுகளில் ஏதோ நீங்கள்தான் சூரியனை உருவாக்கியவர் போல கதை அளக்கின்றீர்கள், ஆகாயத்தில் வசித்தவன் என்ற பெயரில் வானொலித் துறை பற்றி எல்லாம் தெரிந்தவர் நீங்கள்தான் என்பது போல எழுதித் தள்ளுகிறீர்கள் இப்படியான நீங்கள் 1999 ஆம் ஆண்டுகளில் சூரியனில் இணைந்துவிட்டீர்கள் ஆனால் அதன் பின்னர் சூரியனுக்கு வந்த லோஷன் அண்ணாவிடம்தானே நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரி பதவி வழங்கப்பட்டது. இப்படியிருக்கும்போது மற்றவர்களை மட்டம்தட்டி உங்களை பற்றி என்ன அடிப்படையில் இப்படி புளுகித் தள்ளுகின்றீர்கள்?

நீங்கள் இறுதியாக எழுதிய சூரியனைப் பிரிந்த கதையில் ஒரு தலைமைக்குள் கட்டுப்பட்டு வேலை செய்யத் தெரியாத உங்கள் இயல்பை வெளிப்படுத்தியமைக்கு நன்றி. நீங்கள் லோஷன் அண்ணா தலைமைக்குள் வேலை செய்த காலத்திலும், நவநீதன் அண்ணா தலைமையில் வேலை செய்த காலத்திலும் தலைமைக்குள் கட்டுப்பட்டு வேலை செய்ய தெரியாமல்தான் வெளியேறினீர்கள்  என்பது  நமக்கு தெரியாத ஒன்றா என்ன?

"தொழிலாளியை மதிக்கும் முதலாளிக்கு கட்டுப்படாத தொழிலாளியும், தொழிலாளியை மதிக்காத முதலாளியும் வாழ்ந்ததாய் சரித்திரமே இல்லை"

முக்கிய குறிப்பு- இந்தக் கட்டுரை அடுத்தவன் துன்பத்தில் இன்புறும் ஒரு சிலருக்கும், கூடவே இருந்து குழிபறிக்கும் கூட்டத்துக்கும், பதவிக்காக ஏங்குபவர்களுக்கும், முட்டாள்தனமான முதாளித்துவங்களுக்கும் சமர்ப்பணம்.

24 comments:

சிகரம் பாரதி said...

Arumaiyaana padhivu. Naan edhirpaarththa kelvigal/ vidayangal palavatrai padhivu kondulladhu. Vaalththukkal. Naam solvadhu - "iruttinil needhi maraiyattume, oru thalaivan irukkiraan thayangaadhe, thannaale velivarum mayangaadhe...."

idhu thodarbaana palveru thagavalgalai naanum veliyittu varugiren. Pls visit my site and pls read the articles from 46/1

http://newsigaram.blogspot.com

இராமசாமி ரமேஷ் said...

பதவிக்கு வால்பிடிக்கும் இப்படியானவர்களின் மீது உங்கள் கேள்விகள் அருமை அண்ணா....

PORTFOLIO GROUP 11 said...

இன்னும் பலருக்கு வெற்றி fm இல் நடந்தது என்ன என்று தெரியாமல் இருக்கின்றவர்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு பதிவாக மட்டும் இல்லாமல்... நியாயமான கேள்விகளை நியாயமற்றவர்களை நோக்கி கேட்டு இருக்கும் கேள்வி கணைகள் அருமையிலும் அருமை.... ஹிஷாம் முஹமட் தனது சொந்த நலனுக்காக நியாயத்தின் பக்கம் சாய்ந்து இருக்கும் முஸ்லிம் நண்பர்களை, நேயர்களை தன் பக்கம் இழுப்பதுக்கு இனவாதமுறையை கையாண்ட விதத்தையும் சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.....

This my testing blog said...

புதிதாக பதவி ஏற்ற பரணி புரிந்துகொள்ள வேண்டும் பழையவர்களுக்கு திறமையில்லாமல் உங்களை அழைக்கவில்லை அவர்களிக்கன சம்பளத்தினை மறுத்து தான் உங்களை அழைத்துள்ளார்கள் உங்களுக்கு பேரம்பேசிய தொகையை இந்த உழைப்பாளர்களுக்கு கொடுத்திருக்கலாம். இந்த முதலி வர்க்கம். இப்படியான முதலாளிகள் மே தினம் கூட உலகத்தில் கொண்டாடுவது தெரியாதவர்களாக அலுவலக பூச்சியாக அகங்காரம் உள்ள ஒரு வர்க்கம்

suharman said...

தனியார் வானொலி அறிவிப்பாளர்களின் தமிழில் மயங்கியும் இணையத்துடன் கூடிய ஒன்றிப்பினாலும் நான் வானொலியை கேட்பதையே என்றோ நிறுத்தி விட்டேன்.இருப்பினும் முன்பு பாடசாலை,பல்கலைக்கழக காலத்தில் சக்தி, சூரியன் என்பவற்றை தொடர்ச்சியாக கேட்டு வந்தவன் என்ற வகையில் என்னை பொறுத்த வானொலி நிலையத்துக்கு பிரச்சினை வரும் போது அதில் இருந்து வெளியேறிய லோசனின் செயலை நியாயப்படுத்த முடியாது அது அவரது திறமை என்று வாதாடினால் அது இருக்கும் வரை வரையில் லோசனுக்கும் அவர் சார் குழுவினருக்கும் கூடிய விரைவில் இன்னுமொரு ஊடக நிறுவனத்தில் இணையும் வாய்ப்புள்ளது.நிச்சயம் இணைவார்கள் . எனவே வீணாக இதில் அவர்களுக்கு அதரவு தருகிறோம் என்ற பெயரில் செய்பவை எவ்விதமான பயனையும் அளிக்காது. லோசன் புதிதாக இணையும் வானொலியில் அறிவிப்பாளராக சேர உங்களுக்கு வாழ்த்துக்கள்.

மயில்வாகனம் செந்தூரன். said...

சுகர்மன் said...
//என்னை பொறுத்த வானொலி நிலையத்துக்கு பிரச்சினை வரும் போது அதில் இருந்து வெளியேறிய லோசனின் செயலை நியாயப்படுத்த முடியாது//

இங்கு வானொலி நிலையத்தை நடாத்தும் நிறுவனத்தால் ஊழியர்களுக்குத்தான் பிரச்சினையே தவிர வானொலி நிலையத்துக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை.. மேலும் வானொலி பௌதீக ரீதியாக பாதிப்படையவில்லை. குறைந்தபட்சம் உழைப்பாளிகள் ஊதியத்தை பணிப் புறக்கணிப்பின்றி கேட்ட போது அவர்களை முதலாளி வர்க்கம் மோசமாக நடத்தாமல் இருந்திருக்கலாமே!!!

//லோசன் புதிதாக இணையும் வானொலியில் அறிவிப்பாளராக சேர உங்களுக்கு வாழ்த்துக்கள்.// தவறான புரிந்துணர்வு. கொஞ்சம் எனது சுயவிபரத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் சுகர்மன்.

suharman said...

உங்களது இரண்டாவது கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் நண்பர் . ஆனால் நான் வெளியேறியது என்று சொல்ல வந்தது சொல்ல வந்தது சக்தி FM எரிந்த போது அதில் இருந்து சூரியனுக்கு தாவியதையும் பின்னர் அரசால் சூரியன் FM தடை செய்யப்பட்டபோது அதில் இருந்து வெற்றிக்கு போனதையும் பற்றி தான்,

Unknown said...

செந்தூரன் அண்ணா , உங்கள் ஒவ்வொரு கேள்விகளும் சம்பந்தப்பட்டவர்களை சுட்டு எரித்திருக்கும். உங்கள் தைரியத்திற்கு எனது வாழ்த்துக்கள். உங்களைப் போல நானும் லோஷன் அண்ணாவின் (நியாயத்தின்) பக்கம் தான் நிற்பேன். இன்று முதல் நானும் உங்கள் ரசிகை.

Jeyakanesan - Colomo-04 said...

சுகர்மன், என்ன சக்தி எரிந்ததால் லோஷன் அண்ணா விலகினாரா? இதைக்கேட்டால், சிறு பிள்ளையும் சிரிக்கும் ஐயா... அதுவும் முதலாளித்துவத்தின் கூத்து. அபர்ணா சுதன் கோஷ்டியை கூடிய சம்பளத்துக்கு மகாராஜா கூப்பிட்டதால், தன்மானம், சுய கவுரவம் கருதி லோஷன் அண்ணா விலகினார். சூரியன் அப்போது அவரை இறுகப் பிடித்தது. சூரியன் தடை செய்யப் பட்ட போது, அதன் உரிமையாளர், ஜனாதிபதியின் கால்களில் சென்று விழுந்து, அவர் தம்பியும் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டார். போர் மும்முரமாக நடந்த அந்த கால கட்டத்தில், இதனை ஏற்க்க முடியாமல் தான் அவர் வெற்றிக்கு மாறியதாக அவரது நெருங்கிய நண்பர்கள் கூற கேள்விப் பட்டிருக்கின்றேன். லோஷன் அண்ணாவின் ரசிகனாக நான் இருப்பதற்கு முக்கிய காரணம் அவரது அறிவிப்போ, அறிவோ, குரலோ இல்லை... எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு நல்ல நேர்மையான மனிதர் என்பது தான். இல்லாவிட்டால், தனக்கு மட்டும் நல்ல சம்பள்ளம் வாங்கிக்கொண்டு மற்ற ஊழியர்களை பற்றி யோசிக்காமல் போயிருப்பார். எனக்கு தெரிந்து அவருக்கு கொஞ்சம் தன்மானமும், சுய கவுரவமும் அதிகம் - எம் தேசிய தலைவரைப்போல.......

மயில்வாகனம் செந்தூரன். said...

///நான் வெளியேறியது என்று சொல்ல வந்தது சொல்ல வந்தது சக்தி FM எரிந்த போது அதில் இருந்து சூரியனுக்கு தாவியதையும் பின்னர் அரசால் சூரியன் FM தடை செய்யப்பட்டபோது அதில் இருந்து வெற்றிக்கு போனதையும் பற்றி தான்,// எனது இந்தப் பதிவு அநீதி இழைக்கப்பட்ட தொழிலாளிகளுக்காக எழுதப்பட்ட ஒன்று. இருப்பினும் உங்களின் இந்தக் கருத்துக்கும் கொஞ்சம் பதிலளிக்க விரும்புகின்றேன்.

லோஷன் அண்ணா சக்தியிலிருந்து சூரியனுக்கு போக என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.

எழில்வேந்தன் அண்ணா சக்தியிலிருந்து நீங்கிய/நீக்கப்பட்ட பின்னர் சூரியனிலிருந்து அபர்ணா அண்ணா சக்திக்கு அதிபதியாக அழைக்கப்பட்ட பின்னணியில்தான் எழில்வேந்தன் அண்ணாவுடன் இணைந்து சக்தியில் சிரேஷ்ட அறிவிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த லோஷன் அண்ணா சூரியனுக்கு சென்றார்.

அந்தக்காலத்தில் வீரகேசரி வாரவெளியீட்டில் வெளிவந்த பரஸ்பரம் என்னும் ஒருபகுதியில் இரண்டுவாரங்களாக தொடர்ந்து நேயர்கள் அனுப்பியிருந்த கேள்விகளுக்கு லோஷன் அண்ணா வழங்கிய பதில்களில் "முந்தியிருந்த செவிகளை பிந்தி வந்த கொம்புகள் மறைப்பது போல" என்று சொல்லியிருந்தார்.

சக்தி எரிஞ்சதுக்கும் அவரின் விலகலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

மேலும் சூரியனிலிருந்து சூரியன் தடைசெய்யப்பட்ட பின்னர்தானே அவர் விலகிச் சென்றார். சூரியன் இயங்கிக் கொண்டிருந்த போது அவர் விலகிச் செல்லவில்லையே!!!

Vathees Varunan said...

:) good questions

Vathees Varunan said...

:) for follow-up comments

Unknown said...

Jeyakanesan,senthuran அண்ணன்ஸ்,,,
கடந்த காலங்கள் பற்றி சரிவரத்தெரியாத சிலருக்கு சூப்பராக பதிலளித்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.

நேருவின் பக்கம் said...

நல்ல ஒரு பதிவு யார் என்னத்த சொன்னாலும் லோஷன் என்ற திறமையாளியை வெற்றி இழந்து விட்டது இது லோஷனுக்கு பாதிப்பில்லை

Unknown said...

அவனவன் தேவைக்கு அவன் அவன் ஓடி ஓடி உழைக்கின்றான் ..... யாரவது ஒரு சமூக சேவகன் பற்றி பேசினாலும் பரவாயில்லை.... அட சீ......

Bavan said...

=))

அவதானி said...

//சூரியன் தடை செய்யப் பட்ட போது, அதன் உரிமையாளர், ஜனாதிபதியின் கால்களில் சென்று விழுந்து, அவர் தம்பியும் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டார். போர் மும்முரமாக நடந்த அந்த கால கட்டத்தில், இதனை ஏற்க்க முடியாமல் தான் அவர் வெற்றிக்கு மாறியதாக அவரது நெருங்கிய நண்பர்கள் கூற கேள்விப் பட்டிருக்கின்றேன்.//

இது தவறு. ஏறத்தாழ நான்கு மாதங்கள் சூரியன் எப் எம் மீள தொடங்கப்படும் என்று காத்திருந்த பின்னரே லோஷன் வெற்றிக்கு மாறினார். அதில் எந்த தவறுமில்லை. ஆனால் இதற்கு தமிழ் மானப்பற்று என்று முடிச்சு போடுவது தவறு. மேலும் வெற்றியின் அன்றைய உரிமையாளர்கள் கோதாபய ராஜபக்சவின் நண்பர்கள். அவர்கள் பின்னர் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கப்போய் வெற்றி எரிந்தது வேறு கதை

Unknown said...

Jeyakanesan - Colomo-04 said...
//எனக்கு தெரிந்து அவருக்கு கொஞ்சம் தன்மானமும், சுய கவுரவமும் அதிகம் - எம் தேசிய தலைவரைப்போல.......//

ஒப்பீடுகளுக்கு ஒரு அளவுகோல் உண்டு, ஏன் தேவையில்லாமல் இங்கு?

மயில்வாகனம் செந்தூரன். said...

Mubharrakk Thagha said...
//அவனவன் தேவைக்கு அவன் அவன் ஓடி ஓடி உழைக்கின்றான் ..... யாரவது ஒரு சமூக சேவகன் பற்றி பேசினாலும் பரவாயில்லை.... அட சீ......//

ஆகமொத்தம் உங்கள் கருத்து சினிமா, விளையாட்டு, அரசியல் செய்திகளை வெளியிடும் இணையத்தளங்கள் எல்லாத்துக்கும் பொருந்தும் போல.. இனி சமூக சேவகர்களை பற்றி எழுதும் இணையங்களை தவிர மற்ற இணையங்களை தடை செய்துவிடலாம் போல...

Unknown said...

(nantri senthooran annaa!)
Paathikkappattavargalin niyaayamaana kelvikalukkum neyargalin kelvikalukkum pathilalikkaamal vaanolyil paatalgal moolam savaal viduvathaalum maluppum pathilkalai thangalin samooga valaiththalangal pakuthiyil pathivathaalum thangalai niyaayappaduththivita mudiyaathu!

Silar thangalin palaya pagaigalai intha neraththil palitheergavena vaarththaikalai veliyiduvathum pathividuvathum maha mattamaana keezhthara seyal enpathai manathilkollungal.

Anonymous said...

அனைவருக்கும் வணக்கம்... மிக அண்மைக் காலமாக வெற்றி வானொலியில் இடம்பெறும் சில விடயங்கள், அதில் சம்பந்தப்பட்டவர்களை விட வெளியாட்களால் அதிகம் பேசப்பட்டது என்னவோ உண்மை. அவர்களால் தான் இவ்விடயம் பிரபலமானது. ஆனானும் எந்த ஒரு ஊடகமும் இவ்விடயத்தைக் கையில் எடுக்கத் தயங்கியது. அரச வானொலி ஒன்றில் பொதுவான ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பானது வேறு கதை. இப் பதிவை எழுதிய மயில்வாகனம் செந்தூரனிடம் நான் சில கேள்விகளைக் கேட்க ஆசைப்படுகிறேன்.

1)இலங்கையில் தனியார் வானொலிகளில் ஒரு பணிப்பாளரின் சம்பளம் அண்ணளவாக எவ்வளவு?

2) லோஷன் அண்ணவுக்கு வழங்கப்பட சம்பளம் அண்ணளவாக எவ்வளவு?

3)இலங்கையில் தனியார் வானொலிகளில் கடமையாற்றும் (முகாமையாளர், அறிவிப்பாளர் முதலியவர்கள்) சம்பளம் அண்ணளவாக எவ்வளவு?

4)வெற்றியில் க்டமையாற்றி விலகியவர்களின்(முகாமையாளர், அறிவிப்பாளர் முதலியவர்கள்) சம்பளம் அண்ணளவாக எவ்வளவு?

5) இரண்டு மாதங்கள் சம்பளம் இல்லாமலும் கடமையாற்றி வெளியேறியவர்களை மீண்டும் கடமைக்குத் திரும்பக் கொடுத்த கால அவகாசத்தில் அவர்கள் கடமைக்குத் திரும்பி, புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்து இடாதது ஏன்?
6)நிர்வாகம் இலங்கையில் நடைமுறையில் உள்ள சம்பள திட்டத்தை முன்வைத்தபோதும் ஏற்றுக் கொள்ளாதது ஏன்?

7) நிர்வாகத்தினரிடம் இருந்து வான நேரத்தை (air time) வாடகைக்குப் பெற்று வானொலியை நடத்திய முன்னாள் உரிமையாளர்களால் ஏன் இலாபத்தை ஈட்ட முடியவில்லை?

8)இவ்வளவு திறமையான அறிவிப்பாளர்கள் இருந்தும் வெற்றி LMRB அறிக்கையில் 5 ஆம் இடத்தில் இருப்பது ஏன்?

9)வரவு இல்லாமல் அதி கூடிய சம்பளங்களை (இலட்சக் கணக்கில்) வழங்க நீங்கள் உரிமையாளராக இருந்தால் ஒப்புக் கொள்வீர்களா?

10) இவ்வளவு நாட்கள் ஒப்பந்தம் இல்லாமல் வேலை செய்தவர்கள் புதிய ஒப்பந்தத்தில் இலங்கையில் நடைமுறையில் உள்ள தனியார் வானொலி சம்பளப் பட்டியலை முன் வைத்தால் அதை ஏற்றுக் கொள்ளத் தயங்கியது ஏன்?

மொத்தத்தில் இவ் விடயத்தில் வெறுமனே 2 மாத சம்பளமும், ஒப்பந்தக் கடிதமுமா? அல்லது பின்னணி வேறா? தயவு செய்து எனக்கும் அறியத் தாருங்கள்..


மயில்வாகனம் செந்தூரன். said...

Anonymous said...

//ஆனானும் எந்த ஒரு ஊடகமும் இவ்விடயத்தைக் கையில் எடுக்கத் தயங்கியது.//

நாலு சுவருக்குள் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையை நடுத்தெரு வரை கொண்டுவராமல் தொழிலாளிகளை வெற்றி நிறுவனம் கௌரவமாக நடத்தியிருந்தால் நானும் இதை கையிலெடுத்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது.மேலும் முக நூல், டுவிட்டர் போலத்தான வலைப்பூவும்.

//1)இலங்கையில் தனியார் வானொலிகளில் ஒரு பணிப்பாளரின் சம்பளம் அண்ணளவாக எவ்வளவு?

2) லோஷன் அண்ணவுக்கு வழங்கப்பட சம்பளம் அண்ணளவாக எவ்வளவு?

3)இலங்கையில் தனியார் வானொலிகளில் கடமையாற்றும் (முகாமையாளர், அறிவிப்பாளர் முதலியவர்கள்) சம்பளம் அண்ணளவாக எவ்வளவு?

4)வெற்றியில் க்டமையாற்றி விலகியவர்களின்(முகாமையாளர், அறிவிப்பாளர் முதலியவர்கள்) சம்பளம் அண்ணளவாக எவ்வளவு?//

ஒருவரின் தனிப்பட்ட சொத்து விபரம், வருமானம் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. எனவே இந்த கேள்விகளுக்கு விரும்பினால் உரியவர்கள் பதில் தருவார்கள்.

//5) இரண்டு மாதங்கள் சம்பளம் இல்லாமலும் கடமையாற்றி வெளியேறியவர்களை மீண்டும் கடமைக்குத் திரும்பக் கொடுத்த கால அவகாசத்தில் அவர்கள் கடமைக்குத் திரும்பி, புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்து இடாதது ஏன்?
6)நிர்வாகம் இலங்கையில் நடைமுறையில் உள்ள சம்பள திட்டத்தை முன்வைத்தபோதும் ஏற்றுக் கொள்ளாதது ஏன்?//

இந்த திட்டத்தை எல்லாம் பணிப் புறக்கணிப்பின்றி நியாயமான முறையில் ஊழியத்தை கோரிய போது முன்வைத்திருக்கலாமே!!! குறைந்தபட்சம் இரண்டு மாத ஊழியத்தையாவது கொடுப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கலாமே!! ஏன் ஊழியம் கேட்டவர்களை மோசமாக நடத்துவான்? அவர்கள் மேலதிகமாக எதுவும் கேட்கவில்லையே!! தங்கள் உழைப்பிற்கான கூலியைத்தானே கேட்டார்கள்...

//7) நிர்வாகத்தினரிடம் இருந்து வான நேரத்தை (air time) வாடகைக்குப் பெற்று வானொலியை நடத்திய முன்னாள் உரிமையாளர்களால் ஏன் இலாபத்தை ஈட்ட முடியவில்லை?//

அந்த உரிமையாளர்களுக்குள் வந்த உடைவு பற்றி உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை..

//8)இவ்வளவு திறமையான அறிவிப்பாளர்கள் இருந்தும் வெற்றி LMRB அறிக்கையில் 5 ஆம் இடத்தில் இருப்பது ஏன்?//

நீங்கள் இன்னும் பதின்ம வயதை தாண்டவில்லையா? அப்படி தாண்டியிருந்தால் இந்த தரப்படுத்தல்களை எல்லாம் நம்பும் உங்களை பற்றி நான் என்ன சொல்ல?

சூரியனும் முதல்வனாம், சக்தியும் முதல்வனாம், வெற்றியும் முதல்வனாம் இப்ப வசந்தமும் அப்படித்தான் சொல்லிறாங்க.. என்ன கொடுமையப்பா..

//9)வரவு இல்லாமல் அதி கூடிய சம்பளங்களை (இலட்சக் கணக்கில்) வழங்க நீங்கள் உரிமையாளராக இருந்தால் ஒப்புக் கொள்வீர்களா?//

ஏதாவது சமூக சேவை செய்யும் நோக்குடனா குறித்த நிறுவனம் வெற்றி வானொலியை உருவாக்கியது? லாபம் ஈட்ட முடியாது என்றால் எதற்கு வானொலியை தொடர்ந்து செய்கின்றோம் என்ற பெயரில் அடுத்தவன் உழைப்பை ஊதியம் இன்றி உறிஞ்சுகின்றார்கள்? இலட்சக் கணக்கில் தருகின்றோம் என்று ஆசை காட்டி அழைக்கும் இவர்களின் செயற்பாடு இப்போதும் தொடர்கிறதே!!!

//10) இவ்வளவு நாட்கள் ஒப்பந்தம் இல்லாமல் வேலை செய்தவர்கள் புதிய ஒப்பந்தத்தில் இலங்கையில் நடைமுறையில் உள்ள தனியார் வானொலி சம்பளப் பட்டியலை முன் வைத்தால் அதை ஏற்றுக் கொள்ளத் தயங்கியது ஏன்?//

பணிப் புறக்கணிப்புக்கு போக முன்னம் இதை முன்வைத்திருந்தால் கொஞ்சம் பரிசீலித்திருக்க வாய்ப்பு உள்ளதல்லவா? இரண்டு மாத ஊழியத்தை கேட்டால் உனக்கு இங்க வேலை செய்ய விருப்பம் என்றால் வேலை செய் இல்லை என்றால் விட்டிட்டு போ என்று சொன்னவர்கள் பணிப் புறக்கணிப்புக்கு சென்ற போது புதிய சம்பள பட்டியலை முன்வைத்தது வேடிக்கையிலும் வேடிக்கை.

உங்களுடைய சொந்த பெயரில் என்னிடம் கேள்விகளை நீங்கள் கேட்டிருந்தால் நான் இன்னும் கொஞ்சம் உற்சாகமாக பதில் தந்திருப்பேன்.

Anonymous said...

aio aio

sachchitqiao said...

Top 10 BEST Indian Casinos - Mapyro
The best Indian casinos in the world. Top 10 김제 출장샵 BEST Indian 전주 출장안마 Casinos · 보령 출장샵 Kosh Casino · Playaz Casino · 전라북도 출장안마 Hari Casino · 공주 출장안마 Betwinner · Red Dog Casino · Luckyland Casino.