உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Wednesday, May 20, 2009

கடவுள் உள்ளார? இல்லையா?


கடவுள உள்ளாரா? இல்லையா? என்பது பொதுவாக எல்லோரும் விவாதிக்கும் விடயம்தான். நான் கா.பொ.த(சா/த) படித்து கொண்டிருந்த காலம் அது. அதாவது பரீட்சை நெருங்கிக்கொண்டிருந்த வேளை. அப்போது எனது உயிர் தோழனும் என்னோடு எங்கள் வீட்டில்தான் இரவில் படிக்க வருவான். அப்போதெல்லாம் நாங்கள் படிப்பதை விட ஆரோக்கியமான ஏதாவது விடயம் பற்றி விவாதிப்பதுதான் அதிகம். அன்றும் இப்படித்தான், நான் சொன்னேன் கடவுள் என்று ஒருவர் இல்லை என்று, ஆனால் எனது நண்பனோ இல்லை கடவுள் என்று ஒருவர் உள்ளார் என்று சொன்னான். எங்களிற்குள் இது ஒரு பெரிய விவாதமாக தொடர்ந்து கொண்டிருந்தது. வழக்கமாக வானொலிகள் தொடர்பிலான விவாதங்களே எங்களிற்குள் வருவதுண்டு. ஆனால் இந்த விவாதம் அதிலிருந்து வேறுபட்டது என்பதனால் சுவாரசியம் நிறைந்த ஒன்றாக, ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

நான் சொல்லுகின்ற ஒவ்வொரு கருத்திற்கும் எனது நண்பன் எதிர்க்கருத்துக்களை முன் வைத்தான். சரி விவாதத்தை எனக்கு சாதகமாக முடித்து வடலாம் என்று எண்ணி இறுதியாக அவனிடம் கேட்டேன் அதாவது எனது இறுதி அஸ்திரத்தை தொடுத்தேன், கடவுள் இருக்கிறார் என்றால் எங்கே அவரை எனக்கு காட்டு பார்க்கலாம் என்று? (வெற்றி எனக்கு என்று கேட்ட இந்த கேள்விதான் எனக்கு தோல்வியை தரப்போகின்றது என்பது எனக்கு அப்போது தெரியாது) நான் இந்த கேள்வியை கேட்ட உடனே எனது நண்பன் என் முதுகில் ஓங்கி ஒரு அடி அடித்தான். ஆ... வலிக்கிறது ஏன் அடித்தாய் என்று கேட்டேன். வலிக்கிறதா? எங்கே அந்த வலியை காட்டு பார்க்கலாம் என்றான் என் உயிர் தோழன். வலியை எப்படி காட்ட முடயும் அதை உணரத்தானே முடியும் என்று நான் சொன்னேன். உடனே அதே போல்தான் நம்மை போன்ற சாதாரண மனிதர்களினால் கடவுளை காண முடியாது, உணரத்தான் முடியும் என்று கூறினான். ஆஹா வாயை கொடுத்து மாட்டீற்றமே என்ற கவலை மட்டுமல்ல, என் நண்பனின் புத்தி சாதுர்யம் என்னை பிரமிக்க செய்தது. துரதிஸ்டவசம் என்னுயிர் தோழன் இப்போது உயிருடன் இல்லை.

2 comments:

அபர்ணா ஷங்கர் said...

mmmm
i feel sorry 4 sanjeev da.......
bt he s great da........
:(

www.senthuva.com said...

mm. unmaithaan.