ஒரு பக்கம் இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான அணிக்கு 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் லண்டனில் கோலாகலமாக ஒலிம்பிக் போட்டிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பாதுகாப்பு சிக்கல்கள், விமர்சனங்களுக்கு மத்தியில் இம்முறை ஒலிம்பிக் போட்டி லண்டனில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பலரின் பார்வைகளும் இந்தப் போட்டிகளின் மீது பதிந்திருக்க நியுசிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையில் சத்தமே இல்லாமல் நடைபெற்று வரும் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி நியுசிலாந்து அணியை துவம்சம் செய்து வருகின்றது.
அணிசார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கெயில் 150 ஓட்டங்களையும், பவல் 134 ஓட்டங்களையும் குவித்தனர். இது பவல் டெஸ்ட் போட்டிகளில் பெற்றுக் கொண்ட கன்னிச்சதம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டியோனரின் 79 ஓட்டங்களையும், (f)புடடின் 55 ஓட்டங்களையும், அணித்தலைவர் டரன் சமி 50 ஓட்டங்களையும் பெற்றனர்.
பலரின் பார்வைகளும் இந்தப் போட்டிகளின் மீது பதிந்திருக்க நியுசிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையில் சத்தமே இல்லாமல் நடைபெற்று வரும் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி நியுசிலாந்து அணியை துவம்சம் செய்து வருகின்றது.
ஏற்கனவே நடைபெற்று முடிந்த 2 போட்டிகளைக் கொண்ட 20 - 20 தொடரை
2-0 என கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 05 போட்டிகளைக் கொண்ட 50 ஓவர்கள் ஒருநாள் தொடரை 4 - 1 என கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 இலக்குகளினால் வெற்றியீட்டியுள்ளது
கடந்த 25 ஆம் திகதி ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது. இதன்படி முதலாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணியானது 129.1 ஓவர்கள் பந்து வீசப்பட்ட நிலையில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 351 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
நியுசிலாந்து அணி சார்பில் முதல் இனிங்சில் குப்டில் 97 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் முதல் இனிங்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் நரைன் 05 இலக்குகளையும் , ராம்பவுல், ரோச் ஆகியோர் தலா 02 இலக்குகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு முதல் இனிங்கசில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியானது 163.3 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 522 ஓட்டங்களை பெற்றது.
பந்துவீச்சில் நியுசிலாந்து அணிசார்பில் மார்டின் 03 இலக்குகளையும், பிரஸ்வல் , வில்லியம்சன் ஆகியோர் தலா 02 இலக்குகளைவும் வீழ்த்தினர்.
இந்தப் போட்டியின் மூலமாக தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டுள்ள நியுசிலாந்து அணியின் வீரர் நெய்ல் வாக்னர் தனது கன்னி விக்கட்டினை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது இனிங்க்சை ஆரம்பித்த நியுசிலாந்து அணியானது இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தின் போது இரண்டாவது இனிங்க்சில் மொத்தமாக 105.2 ஓவர்கள் பந்து வீசப்பட்ட நிலையில் 102 ஓட்டங்கள் முன்னிலை வகிக்க 272 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.
நியுசிலாந்து அணிசார்பில் இரண்டாவது இனிங்க்சில் மக்கலம் 84 ஓட்டங்களையும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் குப்டில் 67 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் ரோச் 5
இலக்குகளையும், நரைன் 3 இலக்குகளையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது
இனிங்சில் 102 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்னும் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 19.3 ஓவர்களில் ஒரு இலக்கினை இழந்து வெற்றியிலக்கினை எட்டியது.
அணி சார்பில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் கெயில் ஆட்டமிழக்காமல் அதிரடியாக 49 பந்துவீச்சுக்களில் 8 நான்கு ஓட்ட
பெறுதிகள், 2 ஆறு ஓட்ட பெறுதிகள் அடங்கலாக 64 ஓட்டங்களையும், பவல் 30 ஓட்டங்களையும் இரண்டாவது இனிங்சில் சேர்த்தனர்.
பந்துவீச்சில் நியுசிலாந்து அணி சார்பில் பிரஸ்வல் ஒரு இலக்கினை கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக மேற்கிந்தியத் தீவுகள் அணிசார்பில் பந்து வீச்சில் முதலாவது இனிங்க்சில் 05 இலக்குகளையும் இரண்டாவது இனிங்க்சில் 03 இலக்குகளையும் வீழ்த்திய நரைன் தெரிவுசெய்யப்பட்டார்
இவ்விரு அணிகளுக்குமிடையிலான இத் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 2 ஆம் திகதி கிங்ஸ்டனில் ஆரம்பமாகவுள்ளது.
No comments:
Post a Comment