இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் இந்திய அணியானது 02 பந்து வீச்சுக்கள் மீதமிருக்க 05 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டியானது சற்று முன்னர் கொழும்பு R பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது துடுப்பாட்டத்தை முதலில் தேர்வு செய்து களம் புகுந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 இலக்குகளை இழந்து 286 ஓட்டங்களை சேர்த்துக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார (73), அஞ்சலோ மத்தியுஸ்(ஆட்டமிழக்காமல் 71), மஹேல ஜெயவர்த்தன(65) ஆகியோர் அரைச் சதம் கடந்தனர்.
தினேஷ் சந்திமல் ஓட்டமெதனையும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக சகீர்கான் 10 ஓவர்கள் பந்து வீசி 39 ஓட்டங்களை கொடுத்து 2 இலக்குகளை வீழ்த்தினார். ஏனைய வீரர்களான இர்பான் பதான், டிண்டா, ராகுல் சர்மா ஆகியோர் தலா ஒவ்வொரு இலக்குகளை பதம்பார்த்தனர்.

அந்த வகையில் 50 ஓவர்களில் இலங்கை அணி நிர்ணயித்த 287 ஓட்டங்கள் என்னும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது 49.4 ஓவர்கள் நிறைவில் 05 விக்கட்டுக்களை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்று இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் கெளதம் கம்பீர் (102),
சுரேஷ் ரெய்னா (ஆட்டமிழக்காமல் 65) ஆகியோர் சிறப்பாக செயற்பட்டனர்.
ரோஹித் சர்மா ஓட்டமெதனையும் பெறாத நிலையில் எதிர்கொண்ட முதலாவது பந்திலையே ஆட்டமிழந்தார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் மலிங்க 10 ஓவர்கள் பந்து வீசி 60 ஓட்டங்களை கொடுத்து 02 இலக்குகளையும், ரங்கன ஹேரத், திசார பெரேரா ஆகியோர் தலா ஒவ்வொரு இலக்குகளையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணி சார்பில் சதம் கடந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கெளதம் கம்பீர் தெரிவு செய்யப்பட்டார்.
இந்தப் போட்டியில் இலங்கை அணி சார்பில் மத்தியுஸ் பெற்றுக் கொண்ட 71 ஓட்டங்களானது ஒரு நாள் போட்டிகளில் அவர் பெற்றுக் கொண்ட 11 ஆவது அரைச்சதமாகும் என்பதுடன், குமார் சங்கக் கார பெற்றுக் கொண்ட 73 ஓட்டங்களானது அவருடைய 73 ஆவது ஒரு நாள் அரைச்சதமாகும், மஹேல ஜெயவர்த்தன பெற்றுக் கொண்டது 68 ஆவது அரைச்சதமாகும். இதே வேளை இந்திய அணி சார்பில் கெளதம் கம்பீர் பெற்றுக் கொண்ட 102 ஓட்டங்களானது அவர் ஒரு நாள் போட்டிகளில் பெற்றுக் கொண்ட 11 ஆவது சதமாகும்.சுரேஷ் ரெய்னா பெற்றுக் கொண்ட 65 ஓட்டங்களானது ஒருநாள் போட்டிகளில் அவரின் 23 ஆவது அரைச்சதமாகும்.

இந்தப் போட்டியில் இந்திய அணியானது வெற்றி பெற்றதன் மூலமாக இரு அணிகளுக்குமிடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் 2 - 1 என முன்னணியில் உள்ளது . எனவே இந்தத் தொடரைக் கைப்பற்ற வேண்டுமென்றால் இலங்கை அணியானது அடுத்து நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளதுடன் இந்திய அணியானது அடுத்து வருகின்ற இரண்டு போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்றலாம் என்கின்ற நிலையில் அடுத்து வரவுள்ள இரண்டு போட்டிகளையும் எதிர் கொள்ளவுள்ளது.
இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான இந்தத் தொடரின் நான்காவது போட்டியானது எதிர்வரும் 31 ஆம் திகதி கொழும்பு R பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.
2 comments:
மேட்ச் பார்த்திருந்தாலும். மறுபடியும் படித்ததில் மகிழ்ச்சி. நன்றி.
ரொம்ப நன்றி தலைவா...
Post a Comment