இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று செவ்வாய்க் கிழமை ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மகேந்திரசிங் டோனி தலைமையிலான இந்திய அணியானது முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் புகுந்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது 33.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது அணி சார்பாக கெளதம் கம்பீர் (65) அரைச்சதம் கடந்தார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் திசார பெரேரா(03) மத்தியுஸ்(03) மலிங்க(02) ஆகியோர் பிரகாசித்தனர்.
அந்த வகையில் இந்திய அணி நிர்ணயித்த 139 ஓட்டங்கள் என்னும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது 19.5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் 8 ஓவர்கள் பந்து வீசி 3 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 19 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 இலக்குகளை வீழ்த்திய திசார பெரேரா தெரிவு செய்யப்பட்டார்.

அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான உப்புல் தரங்க (ஆட்டமிழக்காமல் 59) டில்ஷான் (50) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசித்ததுடன், இந்திய அணி சார்பில் அஸ்வின் வீழ்த்தப்பட்ட ஒரு விக்கட்டினை கைப்பற்றியிருந்தார்.
இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் 8 ஓவர்கள் பந்து வீசி 3 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 19 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 இலக்குகளை வீழ்த்திய திசார பெரேரா தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணியானது வெற்றிபெற்றதனால் ஐந்து போட்டிகளை கொண்ட தொடரானது 1 - 1 என சம நிலையில் உள்ளது.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்த ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பு R . பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே முதலாவது போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றிக்கு இந்தப் போட்டியில் இலங்கை அணியானது பதிலடி கொடுத்துள்ளது. மூன்றாவது போட்டி எவ்வாறு அமையும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
No comments:
Post a Comment