உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Thursday, July 5, 2012

ஜூலை 6 நான்+வானொலி

2001 ஆம் ஆண்டு இதே ஜூலை மாதம் 6 ஆம் நாள் எனது வாழ்நாளில் மிகவும் முக்கியமான நாள். ஆம் அன்றுதான் கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சி நிகழ்வொன்றில் செய்த வானவில் மாணவர் ஒலிபரப்பு சேவையினூடாக நான் என்னை ஒரு ஒலிபரப்பாளனாக  அறிமுகப்படுத்தினேன். 


மேலும் 2008 ஆம் ஆண்டும் இதே ஜூலை 6 ஆம் நாள் எனக்கு முக்கியமான நாள்தான். ஆம் அந்த நாளில்தான் நான் தாளம் fm இணைய வானொலியில் அறிவிப்பாளராக தெரிவு செய்யப்பட்டேன். அந்த வகையில் தாளம் fm இணைய வானொலியில் 2008 ஜூலை 06 ஆம் நாள் தொடக்கம் 2009 நவம்பர் 03 ஆம் திகதி வரை ஒரு அறிவிப்பளனாகவும், அதன் பின்னர் 2009 நவம்பர் 23 ஆம் திகதி முதல் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் திகதி வரை டான் தமிழ் ஒளித் தொலைக்காட்சி, டான் தமிழ் ஒலி செய்மதி வானொலி என்பவற்றில் ஓளி,ஒலிபரப்பாளனாகவும்  பணி புரிந்துவிட்டு அதன் பின்னர் எனது சொந்த ஊரான முல்லைத்தீவு மாவட்டத்தில் Vanavil Media Networks என்னும் நிறுவனத்தை  நல்ல உள்ளங்களின் உயரிய அர்ப்பணிப்புடன் உருவாக்கி  அதன் ஊடாக www.sanjeevaoli.com என்னும் இணையம் வழியே சஞ்ஜீவ ஒலி வானொலியில்  (இப்போது அந்த வானொலியை தமிழருவி வானொலி என்னும் நாமத்துடன் இயக்குகின்றோம்) இயக்குனராகவும், அறிவிப்பாளராகவும் இன்றுவரை வானொலிப் பயணத்தை  தொடர்கின்றேன். 


2001 ஜூலை 06 ஆம் திகதி முதல் இன்றுவரை வானொலித்துறை தொடர்பில் பல்வேறு புதிய, புதிய அனுபவங்களை பெற முடிந்ததுடன் எனது சொந்த மண்ணில் வானொலித் துறையின் மீது ஆர்வமாய் இருந்தவர்களுக்கு என்னால் இயன்ற, எனக்கு தெரிந்த விடயங்களை சொல்லிக் கொடுத்த திருப்தியும் உண்டு. மேலும்  சஞ்ஜீவ ஒலி ( தமிழருவி ) வானொலியினூடாக  இதுவரை 20 இற்கும் அதிகமானவர்கள் அறிவிப்பாளர் என்னும் அடையாளத்தை பெற்றுள்ளார்கள் என்பதுடன் இப்போது இலங்கையின் வெவேறு பாகங்களிலுமிருந்து நமது வானொலியில் அறிவிப்பாளர்களாக பணிபுரிய பலரும் முல்லைத்தீவை நோக்கி வருகை தரவுள்ளமை பெருமை கொள்ள செய்கின்றது. 


அந்தவகையில் நான் வானொலித் துறைக்குள் காலடி பதித்து 11 ஆண்டுகள் பூர்த்தியாகும் நாளில் கடந்த 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 09 ஆம் திகதி இலங்கையிலிருந்து வெளிவரும் மித்திரன் வார மலரில் பிரசுரமான எனது நேர்காணலினை   எனது வலைப்பூவில் பதிகின்றேன்.



கலைத்துறைக்கான களங்கள் உருவாகுவது ஆரோக்கியமானதே!

 தென்னகத்தை போன்று கலைத்துறைக்கான களங்கள் எமக்கில்லை. ஊடகங்கள் மட்டுமே எமக்கிருக்கும் உயரிய களங்களாகும். இதில் வானொலி, தொலைக்காட்சி என்பன மட்டுமே தமிழர்களுக்குள்ள சிறப்பான இடங்களாகும். எனவே இத்துறையில் புதிய சேவைகள் ஆரம்பமாவது வரவேற்க வேண்டியதே.
இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் சஞ்ஜீவ ஒலி இணைய வானொலியின் பணிப்பாளர் மயில்வாகனம் செந்தூரன். மித்திரன் கலைஞர் சந்திப்பிற்காக அவரை நேர்கண்ட போது...

முதலில் உங்களை பற்றி சற்றுக் கூற முடியுமா?
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் முல்லைத்தீவில்தான். தண்ணீரூற்று சீ.சீ.தமிழ்க் கலவன் பாடசாலை, முள்ளியவளை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை(இப்போது முள்ளியவளை தமிழ் வித்தியாலயம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியவற்றில் ஆரம்பக் கல்வியையும், முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர் கல்வியையும் கற்றேன். சிறிய வயது முதல் ஊடகத் துறையில் அதிலும் குறிப்பாக அறிவிப்புத் துறையில் அதிக நாட்டமும், ஆர்வமும் இருந்தது. எனவே எனது எதிர்கால இலக்காக அறிவிப்புத் துறையை விரிவுபடுத்திக் கொண்டேன்.

உங்களது வானொலிப் பிரவேசம் எவ்வாறு அமைந்தது?
கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி கல்லூரியில் ஒரு கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்வில் வானொலியின் பால் அதிகம் ஈர்க்கப்பட்ட நானும், எனது நண்பர்களும் சேர்ந்து வானவில் மாணவர் ஒலிபரப்பு சேவை என்னும் பெயரில் ஒரு வானொலியை  ஒலிபரப்பினோம். 
நவீன தொலைத்தொடர்பு வசதிகள் எதுவும் இல்லாது இருந்த நமது பிரதேசத்தில் தொலை பேசி மூலம் எப்படி ஒரு வானொலியோடு இணையலாம் என்பதை விளக்குவதற்காக ஒரு தொலைபேசிக் கூடத்தையும் செய்தோம். 
சிறிய வயதில் நாம் செய்த இந்த முயற்சி பெரிய வெற்றியை தேடித்தந்தது. அதிபர், ஆசிரியர்கள், பெரியவர்கள், நண்பர்கள் என எல்லோரும் எம்மை பாராட்டினார்கள். அன்றைய அந்த ஒலிபரப்பில்தான் நான் எனது அறிவிப்பு திறனை வெளிப்படுத்தினேன். 
இவவாறன ஒரு ஆர்வம், திறன் உருவாக 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சக்தி fm வானொலியில் லோஷன் அண்ணாவும், எழில்வேந்தன் அண்ணாவும் சேர்ந்து செய்த நிகழ்ச்சிகளே காரணமாய் அமைந்தன . 
எனவே அவர்கள் இருவரும்தான் வானொலித் துறையில் எனது முதலாவது குருநாதர்கள். அதன் பின்னர் இலங்கை  வெகுஜன ஊடக நிறுவனத்தின் (MMIC ) இயக்குனர் திருS.K. ரமேஷ் , தாளம் fm வானொலியின் பணிப்பாளர் திரு R . தர்ஷன் ஆகியோர் வானொலித் துறை பற்றி நேரடியான பயிற்சிகளையும், நுட்பங்களையும் கற்றுத் தந்தார்கள். 

சில பயிற்சி பட்டறைகளில் மூத்த அறிவிப்பாளர்களின் ஆலோசனைகளும் கிடைத்தன. 
இவ்வாறாக ஆரம்பித்த ஊடகப்பயணம் தாளம் fm வானொலியில் அறிவிப்பாளராகவும், டான் தமிழ் ஒளித் தொலைக் காட்சியில் நிகழ்ச்சித்தொகுப்பாராகவும் தொடர்ந்து இப்போது எனது சொந்த மண்ணிலிருந்து இயக்குனராகவும், அறிவிப்பாளராகவும் தொடர்கின்றது.

அறிவிப்புத் துறை தவிர்ந்த வேறெந்த துறைகளில் உங்களுக்கு ஆர்வம் உள்ளது?
எழுத்துத் துறையில் ஆர்வம் உண்டு. இதன்படி கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் www.senthuva.blogspot.com என்னும் வலைப்பூவில் எனது எண்ணங்களை பதிவு செய்து வருகின்றேன். 

இது தவிர இலத்திரனியல், தொழில்நுட்ப ரீதியான ஆர்வமும் உண்டு. சிறிய வயதில் துடுப்பாட்டம், உதைபந்தாட்டம் போன்றவற்றிலும் எனது தடங்களை பதித்துள்ளேன்.

உங்களது இணைய வானொலிச் சேவையின் நோக்கம் எவ்வாறானது என்பதை விளக்க முடியுமா?
உண்மையில் நமது பிரதேசத்தில் என்னைப் போன்று ஊடகத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் அதிகளவில் உள்ளனர். எனினும் நமது இன்றைய பொருளாதார நிலைமையில் கொழும்பு போன்ற நகருக்கு சென்று அங்கு ஊடகப்பயிற்சி பெற்று அறிவிப்பாளராக வானொலியில் இணைந்து பின்னர் அங்கு பயிற்சி அறிவிப்பாளர் என்ற நிலையிலிருந்து அறிவிப்பாளர் என்ற நிலையை அடைவதென்பது மிகவும் கடினமானதாகும். 
எனவே இவ்வாறான அறிவிப்புத் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஓர் அடிப்படை பயிற்சி களமாகவும், வன்னி மண்ணின் ஊடக அடையாளமாகவும் வன்னி fm சஞ்ஜீவ ஒலியை (தமிழருவி வானொலி) பண்பலையில் மேம்படுத்த வேண்டும் என்பதே நமது பிரதான நோக்கமாகும். 
இதனை விட புதிய புதிய குரல்களை வானொலியில் அறிமுகம் செய்து ஏராளமான அறிவிப்பாளர்களை  உருவாக்க வேண்டும். 

நம்மால் இயன்றவரை நமது பிரதேசத்தில் வாழும் சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டும். இதன் முதற் கட்டமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி ஒரு தொகுதி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை பகிர்ந்தளித்தோம். 


இதனை விட கலைத்துறையிலும் நமது பங்களிப்புக்கள் அதிகமானதாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம். உதாரணமாக இப்போது நமது முல்லைத்தீவு மாவட்டத்தில் இசைக் கச்சேரிகளை செய்யக் கூடிய தனித்துவமான இசைக் குழு ஒன்று இல்லை. எனவே அதனை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபடுள்ளோம். 

உங்கள் இணைய வானொலிக்கு ரசிகர்களின் வரவேற்பு எவ்வாறுள்ளது?
பொதுவாக இணைய வானொலிகள் இளைய தலை முறையினரை குறிவைத்தே நிகழ்ச்சிகளை படைக்கும். இதற்கு நாம் மட்டும் விதிவிலக்கல்ல. எனினும் நமது வானொலியை இளைய தலைமுறையினரை தாண்டியும் ஏராளமானவர்கள் கேட்கிறார்கள். 
உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலிருந்தும் நம்முடன் நேயர்கள் தொடர்புகொள்கிறார்கள். மேலும் உள்நாட்டிலும் இப்போது இணைய பாவனை அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, மன்னார், கண்டி, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கிளிநொச்சி என்று இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் ஏராளமான உறவுகள் நமது வானொலியை செவிமடுப்பதுடன் உலக வாழ் தமிழர்களும் நம்முடன் இணைந்துள்ளார்கள். 
யுத்தத்தின் கொடிய பிடியில் சிக்கிய முல்லைத்தீவிலிருந்து ஒரு வானொலிச் சேவை என்பது உண்மையிலையே எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் நமது வானொலியானது கடல் கடந்து கண்டம் கடந்து உலகெங்கும்  பரந்து  வாழும் தமிழ் பேசும் நெஞ்சங்களுக்கு ஓர் உறவுப்பாலம் என்பதால் நம்மை ஊக்குவிக்கும் வகையிலான கருத்துக்களும், தவறுகளை திருத்தி கட்டமைக்க கூடிய வகையிலான கருத்துக்களும் கிடைப்பது ஆரோக்கியமானதே.

வானொலி அலைவரிசைகள் இணைய வானொலிகள் அதிகரித்துள்ள நிலையில் தமிழ் மொழியின் நிலைமை என்ன?
உண்மையில் தனியார் வானொலிகளின் வருகையின் பின்னர் வானொலி மொழி நடையில் மாற்றங்கள் வந்திருப்பதை மறுப்பதற்கில்லை. இந்த மாற்றங்கள் நேயர்களுக்கும் வானொலிக்கும் இடையில் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 
இருந்த போதிலும் சாதாரணமாக பேச்சு வழக்கில் உள்ள சொற்பதங்களை வானொலியில் கேட்கும் போது கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கின்றது. காரணம் வானொலியின் உயர்ந்த தரத்தை இது பாதிக்கின்றது என்பதாகும். பிரதேச வழக்குகளும் அவ்வப்போது தலை தூக்குவதும் தவிர்க்கப்படுவது நல்லது என நினைக்கின்றேன். 
இவற்றிற்கப்பால் ஒவ்வொரு சொற்களையும் சரியான மாத்திரை பெருமானத்துடன் உச்சரிப்பதில் கவனம் செலுத்தினால் சாலச் சிறந்தது. இப்போது நிறைய வானொலிகள் உருவாகுவது நல்லது என்றே நினைக்கிறேன். காரணம் அதிகமானவர்களுக்கு அது களமாக அமையும்.  இந்தியாவை பொறுத்தவரையில் சினிமாத் துறையானது கலைஞர்களுக்கு களம் கொடுக்கிறது. எனினும் இலங்கையில் கலைஞர்களுக்கான களங்கள் குறைவு. எனவே இப்போதைக்கு ஊடகங்கள் மட்டுமே நமக்கு பெரிய களங்கள் என்பதால் புதிய ஊடகங்கள், வானொலிகள் என்பவற்றை வரவேற்போம்.

இறுதியாக அறிவிப்பு துறைக்கு வர விரும்பும் நமது வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?
இந்த துறைக்கு வருவதற்கு முன்னர் இந்த துறை சார்ந்தவர்களுடன் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுங்கள். அதிக அர்ப்பணிப்பும், ஆர்வமும், திறைமையும் இருந்தால் மட்டுமே இந்த துறை இனிக்கும். அறிவிப்பாளராக பிரபலமாவது ஒன்றும் சாதாரணமான விடயமல்ல. அவாறு பிரபலமானாலும் அந்த பிரபலத்தை தக்க வைப்பதென்பது சுலபமானதல்ல. மேலும் அறிவிப்புத் துறை என்பது ஒன்றும் மிமிக்கிரி கலை அல்ல. நமது தனித்துவம் வெளிப்படும் வகையில் பிரகாசிக்க வேண்டும். இந்த துறைக்குள் வர விரும்புபவர்கள் வெற்றி பெற வேண்டுமென பிரார்த்திக்கின்றேன். 

(மித்திரன் வார மலரில் மேற்படி நேர்காணல் வெளிவருவதற்கு காரணமாய் இருந்தவர் நமது வானொலியில் முன்பு அலுவலக முகாமையாளராகவும், அறிவிப்பாளராகவும் பணி புரிந்த ராமசாமி ரமேஷ் எனவே இந்த இடத்தில் அவருக்கு நன்றி சொல்வதும் பொருத்தமாய் இருக்கும் என நம்புகிறேன்.)

இந்த பதினொரு வருட வானொலிப் பயணத்தில் பலரும் பல்வேறு வழிகளிலும் உதவியுள்ளார்கள். எல்லோருக்கும் என்றும் நன்றியுடையவனாக இருப்பேன். நன்றி..நன்றி..நன்றி...

8 comments:

vidivelli said...

செந்தூரா ........ உங்களின்
மிகப்பெரும் திறமைக்கும், தளர்ந்திடாத முயற்ச்சிக்கும்-எனது
மனம் நிறைந்த வாழ்த்துக்களோடு
மென்மேலும் இப்பணியை
திறம்பட திகழவைத்திட
முகிலுரசி முரசறையும்
முல்லைத்தீவின் முதல் வானொலியாக
என்றென்றும், எக்காலமும்
ஓங்கி ஒலித்திட
உளங்கனிய வாழ்த்துகின்றேன் செந்தூரா ........

Unknown said...

enaku arimukamana kaalam thottu ungalal naanum katruk kondirukiren niraya ungalidam..
Endrum en nandrikal.

ஆத்மா said...

வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் தொடர வழ்த்துகிறேன்..

இலங்கைக்கு இணைய வானொலிகளின் தேவை மிக அவசியம்

மயில்வாகனம் செந்தூரன். said...

vidivelli said... //உங்களின்
மிகப்பெரும் திறமைக்கும், தளர்ந்திடாத முயற்ச்சிக்கும்-எனது
மனம் நிறைந்த வாழ்த்துக்களோடு..// உங்கள் கருத்துக்கள் புத்துணர்ச்சி தருகின்றன.. முல்லை மண்ணிலிருந்து நமது பயணம் தொடரும்.. நன்றி.. நன்றி.. மிக்க மிக்க நன்றி..

மயில்வாகனம் செந்தூரன். said...

ABDUL BASITH said... ///enaku arimukamana kaalam thottu ungalal naanum katruk kondirukiren niraya ungalidam..
Endrum en nandrikal./// உங்கள் வருகை, கருத்துக்கள் சந்தோசமளிக்கிறது... மிக்க மிக்க நன்றி தலைவா...

மயில்வாகனம் செந்தூரன். said...

சிட்டுக்குருவி said...
///வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் தொடர வழ்த்துகிறேன்..

இலங்கைக்கு இணைய வானொலிகளின் தேவை மிக அவசியம்/// நன்றி.. நன்றி... இலங்கையில் உண்மையில் இணைய வானொலிகளின் தேவை அதிகம் என்கின்ற போதும் இலங்கையிலிருந்து இணைய வானொலிகளை வெற்றிகரமாக செய்வதிலுள்ள கஷ்டமே இணைய வானொலிகள் குறைவாக இருக்க காரணம்.. இந்த நிலைமை மாறினால் நாமும் இன்னும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம் என்று நம்புகின்றோம்..

Shanthamenan said...

Congratulation Senthooran!! I am happy to see your progress in your journey. Go ahead....

மயில்வாகனம் செந்தூரன். said...

Shanthamenan said... ///Congratulation Senthooran!! I am happy to see your progress in your journey./// நன்றி மேனன் அண்ணா.. உங்கள் அன்பும், ஆதரவும் உற்சாகம் தருகின்றது..