கிரிக்கட்டின் தாயகம் இங்கிலாந்து என்றாலும் கிரிக்கட்டில் ஜாம்பவனாக திகழ்ந்து நான்கு முறை உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய பெருமையுடன் ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் நீண்ட காலமாக முதலிடத்தையும் தக்க வைத்துள்ள அணியாக அவுஸ்திரேலிய அணி திகழ்வதை மறுப்பதற்கில்லை.
எனினும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்திற்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வரும் அவுஸ்திரேலிய அணி தொடரின் நான்காவது போட்டி நேற்றைய தினம் நடைபெற்ற நிலையில் தொடரை 3 - 0 என்ற கணக்கில் இழந்துள்ளது.
நேற்றைய தினம் செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குக் தலைமையிலான இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியினர் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை சேர்த்தனர். அவுஸ்திரேலிய அணி சார்பில் டேவிட் கசி மாத்திரமே அரைச்சதம் கடந்த ஒரே வீரராக இருந்தார் (73 பந்துகளில் 9 நான்கு ஓட்ட பெறுதிகள் அடங்கலாக 70 ஓட்டங்கள்).
இங்கிலாந்து அணி சார்பில் Fin 4 இலக்குகளையும் அண்டர்சன், பிரஸ்னன் ஆகியோர் தலா 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.
அந்தவகையில் பதிலுக்கு 50 ஓவர்களில் 201 ஓட்டங்களை மாத்திரமே பெற்றால் வெற்றி என்கின்ற இலக்குடன் துடுப்பெடுத்தாட களம் புகுந்த இங்கிலாந்து அணியினர் 47 .5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 201 ஓட்டங்கள் என்னும் வெற்றி இலக்கினை அடைந்தனர். இங்கிலாந்து அணி சார்பில் பெல்(69 ), trrot (ஆட்டமிழக்காமல் 64 ) ஆகியோர் அரைச் சதம் கடந்தனர்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் McKay 2 இலக்குகளையும் வீழ்த்தினார்.
மேலும் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் பிரகாசித்த Fin ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
இவ்வாறாக நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது போட்டியில் இங்கிலாந்து அணி 13 பந்து வீச்சுக்கள் மீதமிருக்க 8 இலக்குகளினால் வெற்றியீட்டியது. இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் நான்காவது போட்டியே நேற்றைய தினம் நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 15 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன் இரண்டாவது போட்டியில் 26 பந்து வீச்சுக்கள் மீதமிருக்க 6 இலக்குகளினால் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது. மேலும் மூன்றாவது போட்டி பந்து வீச்சு எதுவும் மேட்கொள்ளப்படாத நிலையில் கைவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளில் வெற்றியீட்டினால் மாத்திரமே தொடரை சமப்படுத்த முடியும் என்ற நிலையில் அவுஸ்திரேலிய அணியினரும், மீதமிருந்த இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற நிலையில் இங்கிலாந்து அணியும் நான்காவது போட்டியில் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது. இதில் வெற்றி பெற்றதன் மூலமாகவே இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்த தொடரின் எந்தவொரு போட்டியிலும் வெற்றி பெறாத அவுஸ்திரேலிய அணி நாளை மறு தினம் மான்செஸ்டரில் நடைபெறவுள்ள ஐந்தாவது போட்டியிலாவது வெற்றி பெறுமா?
உண்மையில் அண்மைக் காலமாக இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் பல்வேறு வெற்றிகளை பெற்றுவருகின்ற போதிலும், வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் போது சாதிக்க தவறுகின்றது என்னும் குற்றச்சாட்டும் நிலவுகின்றது. இதற்கு எதிர் வரும் காலங்களில் இங்கிலாந்து முற்றுப்புள்ளி வைக்குமா? மேலும் அவுஸ்திரேலிய அணியுடன் ஒரு நாள் போட்டியில் பெற்ற வெற்றியை ஜூலை 19 ஆம் திகதி ஆரம்பிக்க போகும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தக்க வைக்குமா இங்கிலாந்து அணி? பொறுத்திருந்து பார்க்கலாம்.

3 comments:
buy tramadol cash on delivery buy ultram online no rx - buy tramadol online no prescription
no prescription phentermine order phentermine diet pills - phentermine 37.5 no prescription
generic phentermine order phentermine by phone - buy phentermine online 2012
Post a Comment