இந்திய மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றியீட்டியுள்ளது. கடந்த 31 ஆம் திகதி ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணியானது முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் புகுந்தது.
இதன்படி முதலாவது இனிங்க்சில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணியானது 90 .1 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 365 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
நியுசிலாந்து அணி சார்பில் அணியின் தலைவர் ரோஸ் டெய்லர் 113 ஓட்டங்களையும், இலக்கு காப்பாளர் van wky 71 ஓட்டங்களையும், குப்டில் 53 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதன்படி முதலாவது இனிங்க்சில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணியானது 90 .1 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 365 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
நியுசிலாந்து அணி சார்பில் அணியின் தலைவர் ரோஸ் டெய்லர் 113 ஓட்டங்களையும், இலக்கு காப்பாளர் van wky 71 ஓட்டங்களையும், குப்டில் 53 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் முதல் இனிங்க்சில் ஓஜா ஐந்து இலக்குகளையும், சகீர் கான் இரண்டு இலக்குகளையும் பதம்பார்த்தனர்.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இனிங்க்சை ஆரம்பித்த இந்திய அணியானது 96 .5 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 353 ஓட்டங்களை மாத்திரமே சேர்த்தது.
இந்திய அணி சார்பில் விராட் கோலி 103 ஓட்டங்களையும், அணித்தலைவர் மகேந்திரசிங் டோனி 62 ஓட்டங்களையும், சுரேஷ் ரெய்னா 55 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் நியுசிலாந்து அணி சார்பில் சௌத்தி ஏழு இலக்குகளையும், பிரஸ்வெல் இரண்டு இலக்குகளையும் பதம்பார்த்தனர்.
தொடர்ந்து இரண்டாவது இனிங்க்ஸ்சிற்காக துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணியானது 73 .2 ஓவர்களில் 248 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் பறிகொடுத்தது.
நியுசிலாந்து அணி சார்பில் பிராங்க்ளின் 41 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் அஸ்வின் ஐந்து இலக்குகளையும், உமேஷ் ஜாதவ், ஓஜா ஆகியோர் தலா இரண்டு இலக்குகளையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு இரண்டாவது இனிங்க்சில் 261 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்னும் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது 63 .2 ஓவர்கள் நிறைவில் ஐந்து இலக்குகளை இழந்து 262 ஓட்டங்களைப் பெற்று ஐந்து இலக்குகளினால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றீயீட்டியுள்ளது.
இரண்டாவது இனிங்க்சில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும், மகேந்திரசிங் டோனி ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களையும், புஜாரா 48 ஓட்டங்களையும் சேர்த்தனர்.
நியுசிலாந்து அணி சார்பில் பட்டேல் மூன்று இலக்குகளை பதம்பார்த்தார்.
போட்டியின் ஆட்ட நாயகனாக விராட் கோலி தெரிவு செய்யப்பட்டதுடன் தொடரின் நாயகனாக தமிழக வீரர் அஷ்வின் தெரிவு செய்யப்பட்டார். இந்தப் போட்டியின் முதல் இனிங்சில் கோலி பெற்றுக் கொண்ட 103 ஓட்டங்களானது டெஸ்ட் போட்டியில் அவரின் இரண்டாவது சதமாகும்.
அந்த வகையில் இந்தப் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றமையால் நியுசிலாந்து 0 - 2 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது.
No comments:
Post a Comment