இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டியின் பத்தாவது போட்டியில் குழு A இல் இந்திய மற்றும், இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி சற்று முன்னர் கொழும்பு R பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டோனி தலைமையிலான இந்திய அணியினர் நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்கள் நிறைவில் நான்கு இலக்குகளை இழந்து 170 ஓட்டங்களை சேர்த்தனர்.
அணி சார்பில் ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 33 பந்து வீச்சுக்களை எதிர்கொண்டு ஐந்து நான்கு ஓட்ட பெறுதிகள், ஒரு ஆறு ஓட்ட பெறுதி அடங்கலாக 55 ஓட்டங்களையும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கம்பீர் 45 ஓட்டங்களையும், கோலி 40 ஓட்டங்களையும் குவித்தனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் fin இரண்டு இலக்குகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து இருபது ஓவர்களில் 171 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்னும் இலக்குடன் துடுப்பெடுத்தாட களம் புகுந்த நியுசிலாந்து அணி 14.4 ஓவர்கள் நிறைவில் 80 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்து சுருண்டது.
அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கீஸ்வேட்டர் 35 ஓட்டங்களை பெற்றார்.
இந்திய அணியின் பந்து வீச்சில் ஹர்பஜன்சிங் நான்கு இலக்குகளையும், இர்பான் பதான், பியு சாவ்லா ஆகியோர் தலா இரண்டு இலக்குகளையும் இலக்குகளையும் வீழ்த்தினர்.
அந்த வகையில் இந்த போட்டியில் இந்திய அணியானது 90 ஓட்டங்களினால் அபாரமான வெற்றியினை பெற்றது.
போட்டியின் ஆட்ட நாயகனாக அணி
இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் பிரகாசித்த ஹர்பஜன்சிங் தெரிவு செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment