இலங்கையில் நடைபெற்று வரும் இருபதுக்கு-இருபது உலகக் கிண்ண போட்டியின் பத்தொன்பாவது போட்டியில் அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. கொழும்பு R பிரேமதாச விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணியினர் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்திருந்தனர்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியினர் நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்கள் நிறைவில் ஐந்து இலக்குகளை இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியினர் நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்கள் நிறைவில் ஐந்து இலக்குகளை இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
அணியின் சார்பில் பீட்டர்சன் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும், Behardien ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும், JP டுமினி 30 ஓட்டங்களையும் சேர்த்தனர்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் டொஹெர்தி 3 இலக்குகளையும், வொட்சன் 2 இலக்குகளையும் பதம்பார்த்தனர்.
பதிலுக்கு இருபது ஓவர்களில் 147 ஓட்டங்கள் என்னும் வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியினர் 17.4 ஓவர்களில் இரண்டு இலக்குகளை இழந்து வெற்றி இலக்கினை அடைந்தனர்.
அணி சார்பில் வொட்சன் 70 ஓட்டங்களையும், மைக் ஹசி ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களையும் சேர்த்தனர்.
தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சில் மோர்கல், பீட்டர்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு இலக்குகளை வீழ்த்தினர்.
அந்த வகையில் இந்த போட்டியில் 14 பந்துவீச்சுக்கள் மீதமிருக்க அவுஸ்திரேலிய அணியானது 8 இலக்குகளினால் வெற்றியீட்டியுள்ளது.
போட்டியின் ஆட்ட நாயகனாக அவுஸ்திரேலிய அணி சார்பில் துடுப்பாட்டத்திலும், பந்து வீச்சிலும் பிரகாசித்த வொட்சன் தெரிவு செய்யப்பட்டார்.
தோற்றது தென்னாபிரிக்கா என்றாலும் தென்னாபிரிக்க அணியை நம்பியுள்ள பந்தயக்காரர்கள் தோற்று விடாமல் இருப்பார்களா?
இது இவ்வாறு இருக்க இருபதுக்கு-இருபது உலகக் கிண்ண போட்டியின் இருபதாவது போட்டியில் தற்போது பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

No comments:
Post a Comment