இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரின் இருபதாவது போட்டியில் super eight சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதிய பரபரப்பான போட்டி சற்று முன்னர் கொழும்பு R பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியினர் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தனர்.
இதன்படி பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 128 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியினர் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தனர்.
இதன்படி பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 128 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
அணியின் சார்பில் மலிக் 28 ஓட்டங்களையும், உமர் அக்மல் 21 ஓட்டங்களையும், அணித் தலைவர் ஹபீஸ் 15 ஓட்டங்களையும், அப்ரிடி 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்திய அணியின் பந்து வீச்சில் பாலாஜி 3 இலக்குகளையும், யுவராஜ்சிங், ,அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு இலக்குகளையும், கோலி, இர்பான்பதான் ஆகியோர் தலா ஒவ்வொரு இலக்குகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து இருபது ஓவர்களில் 129 ஓட்டங்கள் என்னும் வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 17 ஓவர்களில் இரண்டு இலக்குகளை மாத்திரம் இழந்து 129 ஓட்டங்களை பெற்றது.
அணி சார்பில் விராட் கோலி 78 ஓட்டங்களையும் வீரேந்திர சேவாக் 25 ஓட்டங்களையும், யுவராஜ் சிங் 19 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்தப் போட்டியில் துடுப்பாட்ட வீரர்களை பந்து வீச்சில் இந்திய அணியின் தலைவர் டோணி அதிகமாக பயன்படுத்தியமை இருபது-இருபது போட்டிகளுக்கான சிறந்த பந்து வீச்சு வியூகம் என்கின்ற போதிலும் பாகிஸ்தான் அணியுடனான பரபரப்பான போட்டியில் இவ்வாறான உத்தியை கையாண்டமை டோனியின் அசாத்தியமான நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது.