இந்திய அணியைப் பொறுத்த வரையில் தங்கள் நாட்டில் நடந்த தொடரை வெற்றிகொண்டேயாக வேண்டிய கட்டாயத்தில் முதல்போட்டியை கஷ்டப்பட்டு சமநிலைப்படுத்திவிட்டு அடுத்த இரண்டு போட்டிகளையும் மிகவும் அபாரமாக வெற்றிபெற்று டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியிருக்கிறார்கள். அந்த வகையில் இதுவரையில் முதலிடத்தில் இருந்த தென்னாபிரிக்கா இரண்டாமிடத்துக்கும், இரண்டாமிடத்திலிருந்த இலங்கை நான்க்காமிடத்துக்கும் பின்தள்ளப்பட்டிருக்கின்றன. நான்காமிடத்திலிருந்த அவுஸ்திரேலியா மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.
இலங்கையை காப்பாற்றியிருந்தார்கள்.
கடந்த இரண்டாம் திகதி ஆரம்பித்து இன்று நிறைவுற்றிருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரையில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் கம்பீர் இல்லாமல் அவருக்கு பதிலாக முரளி விஜயை பயன்படுத்தி இந்தியா வெற்றிபெற்றமையையும் கவனத்தில்கொள்ளவேண்டும். உண்மையில் முரளி விஜய் தனக்குக்கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தியிருந்தார். ஆனாலும் 13 ஓட்டங்களால் சதமடிக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டமை துரதிஷ்டவசம் என்றே சொல்லவேண்டும். அண்மையில் கம்பீர் இல்லாத நிலையில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இந்தியா யாரைக் களமிறக்கப் போகிறது (நிரந்தரமாக) என்று எழுந்த கேள்விக்கு முரளி விஜய் தனது துடுப்பாட்டத்தின் மூலம் பதில் சொல்லியுள்ளார்.
நிறைய சாதனைகள் நிகழ்த்தப்பட்ட மும்பை மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மற்றுமொரு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ஷேவாக் முச்சதம் அடிக்கும் வாய்ப்பை ஏழு ஓட்டங்களினால் தவற விட்டிருந்தார். அத்துடன் இந்தப்போட்டியில் இந்திய அணியின் தலைவர் டோனி சதமடிக்க வேண்டுமென்கின்ற நோக்கில் விளையாடியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தபோதிலும் இந்திய அணி வெற்றி பெற்றமையால் டோனி தப்பித்துக் கொண்டார். இல்லையேல் எல்லோரும் டோனியை வசைபாட ஆரம்பித்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
இலங்கை அணியைப் பொறுத்தவரையில் பந்துவீச்சு மிக மிக மோசமாக இருந்தது. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் முரளிதரன் பெரிதாக சோபிக்கவில்லை. ஆரம்பத்தில் இவர்மீதான விமர்சனங்கள் கடுமையாக இருந்தாலும் இலங்கைக்கு தலையிடியைக் கொடுத்த ஷேவாக்கின் விக்கட்டை வீழ்த்தியதன் மூலம் முரளிதரன் விமர்சனங்களில் இருந்து கொஞ்சம் காப்பாற்றப்பட்டார் என்றே சொல்ல வேண்டும்.
இலங்கை அணியைப் பொறுத்த வரையில் முதலாவது இனிங்ஸ்ஸில் டில்ஷான் சதமடித்து (109 ) காப்பாற்றியிருந்தார். அத்துடன் மத்தியுஸ் (99 ) ஒரு ஓட்டத்தினால் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டிருந்தார். பரணவிதாரண (53 ) அரைச் சதம் கடந்திருந்தார். ஆனால் இரண்டாவது இனிங்ஸ்ஸில் அணித் தலைவர் சங்கக்கார (137 ) சதம் கடந்திருந்தார். பரணவிதாரண (54 ) அரைச் சதம் கடந்தார். தவிர வேறு எந்தவொரு வீரர்களும் பிரகாசிக்கவில்லை. பந்துவீச்சில் முரளிதரன் (4 ), ஹேரத் (3 ) ஆகியோர் ஓரளவுக்குஇலங்கையை காப்பாற்றியிருந்தார்கள்.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் துடுப்பாட்ட வீரர்களும் சரி பந்துவீச்சாளர்களும் சரி தங்கள் கடமைகளை சிறப்பாகச் செய்திருந்தார்கள். அந்த வகையில் முதல் இனிங்ஸ்ஸில் ஷேவாக் (293 ) ஏழு ஓட்டங்களால் முச்சத வாய்ப்பை தவறவிட்டிருந்தார். அணித்தலைவர் டோனி (100 ) சதம் கடந்தார். முரளி விஜய் (87 ), டிராவிட் (74 ), லக்ஸ்மன் (62 ), டெண்டுல்கர் (53 ) ஆகியோர் அரைச் சதம் கடந்தார்கள். பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக முதல் இனிங்ஸ்ஸில் ஹர்பஜன்சிங் (4 ), ஒளஜா (3 ) ஆகியோரும் இரண்டாவது இனிங்க்ஸ்ஸில் ஸ்ரீஷாந்தும் (5 ) பிரகாசித்திருந்தார்கள். மேலும் இன்றைய போட்டியின் சிறப்பாட்டக் காரராகவும், தொடர் நாயகனாகவும் வீரேந்திர ஷேவாக் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
6 comments:
நான் மேட்ச் பார்கிரதையே விட்டுட்டன். சோறு தண்ணி இல்லாமல் பார்த்த காலம் எல்லாம் மலை ஏறிட்டுது
தற்போது இலங்கை அணி நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது, நீங்கள் குறிப்பிட்டது போன்று மூன்றாம் இடம் அல்ல.
இந்தியா 124 புள்ளிகள்
தென்னாபிரிக்கா 122 புள்ளிகள்
அவுஸ்திரேலியா 116 புள்ளிகள்
இலங்கை 115 புள்ளிகள்
///நான் மேட்ச் பார்கிரதையே விட்டுட்டன்.////
உண்மைதான் வரோதயன்... எனது பதிவில் விளையாட்டு இல்லை என்கின்ற குறையை கருத்தில்கொண்டே இந்தப் பதிவிலிருந்து விளையாட்டையும் ஆரம்பித்திருக்கிறேன்...
A.V.Roy said...
///தற்போது இலங்கை அணி நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது, நீங்கள் குறிப்பிட்டது போன்று மூன்றாம் இடம் அல்ல.///
தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு மனமார்ந்த நன்றிகள்... அப்பிடியே பதிவிலும் மாற்றிவிடுகிறேன்..... அடிக்கடி வாருங்கள்.....
நிச்சயமாக... நானும் ஒரு வலைப்பதிவை தொடங்கி தவழ ஆரம்பித்துள்ளேன். உங்களின் மேலான ஆதரவினையும் எதிர் பார்க்கின்றேன்.
A.V.Roy said...
///நானும் ஒரு வலைப்பதிவை தொடங்கி தவழ ஆரம்பித்துள்ளேன். உங்களின் மேலான ஆதரவினையும் எதிர் பார்க்கின்றேன்.///
நான் உங்கள் தளத்துக்கு விஜயம் செய்து கருத்துரைத்திருக்கிறேன்.. முதலாவது பதிவுக்கு.. ஆனால் இரண்டாவது பதிவுக்கு கருத்துரைக்க முடியவில்லை... உங்கள் முயற்சி வெற்றிபெறட்டும்.. இனிய வாழ்த்துக்கள்...
Post a Comment