இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்ற ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியானது பன்னிரண்டு பந்து வீச்சுக்கள் மீதமிருக்க நான்கு இலக்குகளினால் வெற்றியீட்டியுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணியானது ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகின்றது. இந்த தொடரின் மூன்றாவது போட்டியானது இன்றைய தினம் வெள்ளிக் கிழமை ஓவல் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.
இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணியானது முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம்புகுந்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 46 .4 ஓவர்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 211 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ்
அண்டர்சன் நான்கு இலக்குகளையும்,Dernbach மூன்று
இலக்குகளையும், Tredwell இரண்டு இலக்குகளையும்
வீழ்த்தினர்.
அண்டர்சன் நான்கு இலக்குகளையும்,Dernbach மூன்று
இலக்குகளையும், Tredwell இரண்டு இலக்குகளையும்
வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 50 ஓவர்களில் 212 ஓட்டங்களை பெற்றுக் கொண்டால் வெற்றி என்கின்ற இலக்குடன் துடுப்பெடுத்தாட களம் புகுந்த இங்கிலாந்து அணியானது 48 ஓவர்கள் நிறைவில் ஆறு இலக்குகளை இழந்து வெற்றி இலக்கினை அடைந்தது. இங்கிலாந்து அணி சார்பில் இயன் மோர்கன் 73 ஓட்டங்களையும், trott 71 ஓட்டங்களையும் சேர்த்தனர். பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் பீட்டர்சன் இரண்டு இலக்குகளை வீழ்த்தினார். மேலும் இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த இயன் மோர்கன் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் முதலாவது போட்டி மழை காரணமாக முடிவு எட்டப்படாத நிலையில் கைவிடப்பட்டதுடன் இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணியானது 80 ஓட்டங்களினால் வெற்றி பெற்றிருந்தது. ஏற்கனவே தென்னாபிரிக்க அணியிடம் மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என பறி கொடுத்த இங்கிலாந்து அணியானது அடுத்து வருகின்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா? அல்லது தென்னாபிரிக்க அணி தனது சாதனைப் பயணத்தை தொடருமா? பொறுத்திருந்து பார்க்கலாம். இவ்விரு அணிகளுக்குமிடையிலான நான்காவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி எதிர்வரும் 2 ஆம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
No comments:
Post a Comment