இந்திய மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கடந்த 23 ஆம் திகதி வியாழக் கிழமை ஹைதராபாத் ராஜீவ் காந்தி விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து முதலாவது இனிங்க்ஸ்சிற்காக களம் புகுந்தது.. இதன்படி முதலாவது இனிங்க்ஸ்சில் இந்திய அணியானது 134.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 438 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணிசார்பில் புஜாரா மிகவும் சிறப்பாக செயற்பட்டு 159 ஓட்டங்களையும், அணித்தலைவர் டோனி 73 , விராட் கோலி 58 ஓட்டங்களையும் சேர்த்தனர்.
பந்து வீச்சில் நியுசிலாந்து அணி சார்பில் patel 4 இலக்குகளையும், Boult 3 இலக்குகளையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து முதலாவது இனிங்க்ஸ்சில் துடுப்பெடுத்தாட களம் புகுந்த நியுசிலாந்து அணியானது 61.3 ஓவர்கள் நிறைவில் 159 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. நியுசிலாந்து அணிசார்பில் franklin ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களை பெற்றார்.
இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் அஷ்வின் 6 இலக்குகளையும், ஓஜா 3 இலக்குகளையும் வீழ்த்தினர்.
முதலாவது இனிங்க்ஸ்சில் நியுசிலாந்து அணி பெற்றுக் கொண்ட ஓட்டங்கள் குறைவாக இருந்தமையால் இரண்டாவது இனிங்க்ஸ் ஐ ஆரம்பித்த நியுசிலாந்து அணியானது இரண்டாவது இனிங்க்ஸ்சில் 79 .5 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 164 ஓட்டங்களை மாத்திரமே சேர்த்தது. நியுசிலாந்து அணி சார்பில் இரண்டாவது இனிங்க்ஸ் சில் வில்லியம்சன் 52 ஓட்டங்களையும், மக்கலம் 42 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் இரண்டாவது இனிங்க்ஸ்சிலும் அஷ்வின் 6 இலக்குகளையும், ஓஜா 3 இலக்குகளையும் பதம்பார்த்தனர்.
அந்த வகையில் இந்திய மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணியானது ஒரு இனிங்க்ஸ்சாலும் 115 ஓட்டங்களினாலும் வெற்றியீட்டி சாதனை படைத்துள்ளது.
இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணி சார்பில் இரண்டு இனிங்க்சிலும் தலா 6 இலக்குகள் வீதம் இந்தப் போட்டியில் மொத்தம் 12 இலக்குகளை பதம்பார்த்த தமிழக வீரரான அஷ்வின் தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பில் முதலாவது இனிங்க்சில் புஜாரா பெற்றுக் கொண்ட 159 ஓட்டங்களானது டெஸ்ட் போட்டி ஒன்றில் அவரது அதிகூடிய ஓட்டப் பெறுதி என்பதுடன் டெஸ்ட் போட்டியில் அவரின் கன்னிச் சதம் என்பதும் முக்கியமான விடயமாகும். இதற்கு முன்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு அக்டோபரில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் பெற்றுக் கொண்ட 72 ஓட்டங்களே அவரது அதிகூடிய ஓட்டங்களாக பதிவாகியிருந்தது. இது வரை மொத்தமாக 4 டெஸ்ட் போடிகளில் விளையாடியுள்ள புஜாரா 6 இனிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி ஒரு சதம், ஒரு அரைச் சதம் அடங்கலாக மொத்தமாக 266 ஓட்டங்களை சேர்த்துள்ளார்.
இந்திய மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 31 ஆம் திகதி வெள்ளிக் கிழமை பெங்களுர் சின்னச்சுவாமி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன் இவ்விரு அணிகளும் இரண்டு 20 - 20 போட்டிகளிலும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:
buy tramadol online cod overnight tramadol order online tramadol 50mg - tramadol online no prescription
Post a Comment