மேலும் அன்றைய காலங்களில் சாதாரணமாக வழக்கிலிருந்த எத்தனையோ சொற்கள் இன்று வழக்கிழந்து அல்லது அரும்பதங்கள் என்ற அடையாளங்களுடன் இருக்கின்றன. அது மட்டுமன்றி வேறு மொழிகளின் ஊடுருவல்களும் தமிழ் மொழியின் அடிப்படைத் தன்மைகள் சிலவற்றை மாற்றி அமைத்திருக்கின்றன. அத்துடன் காலத்தின் சுழற்சியில் அறிவியல், விஞ்ஞானத்தின் வளர்ச்சிகளால் சில கலைச் சொற்களின் உருவாக்கங்களும் தவிர்க்க முடியாதவையாக உள்ளன.
இவ்வாறாக ஏராளமான ஆரோக்கியமான, ஆரோக்கியமற்ற மாற்றங்களை தமிழ் மொழி சந்தித்து வந்துள்ளது. இன்னும் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.
இந்த விடயங்கள் ஒருபுறமிருக்க நமது தமிழ் மொழிக்குள்ளே இருந்த பல தத்துவங்களும், கருத்துக்களும், சிந்தனைகளும் இன்று திரிபடைந்து வழக்கில் உள்ளமையையும் காணமுடிகின்றது. அந்த வகையில் நான் அறிந்த திரிபடைந்துள்ள விடயங்களில் சிலவற்றை இந்தப் பதிவின் வழியே பகிர்ந்து கொள்கின்றேன்...
இன்று பொதுவாக எல்லா விடயங்களையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்பதில் அனைவருக்கும் அதீத ஆர்வமுள்ளது உண்மைதான். இந்த எல்லா விடயங்கள் என்பதுக்குள் நல்ல விடயங்களும் வரும் தீய விடயங்களும் வரும். இத்தனை அடிப்படையாகக் கொண்டு நம்மிடையே "களவும் கற்று மற" என்று ஒரு கருத்து உள்ளது. நம்மில் பெரும்பாலானவர்கள் இது தொன்றுதொட்டு வந்த ஒன்று என எண்ணுகின்றோம். ஆனால் இது அவ்வாறு வந்ததல்ல. அதாவது, அடிப்படையில் "களவும் கத்தும் மற" எனற கருத்தைத்தான் நாம் களவும் கற்று மற என்று மாற்றியிருக்கிறோம்.
இங்கு களவு என்பது திருட்டையும், கத்து என்பது பொய்யையும் குறிக்கின்றது. ஆகவே உண்மையில் களவையும், பொய்யையும் மறக்க வலியுறுத்துவதாகவே இதன் நோக்கம் அன்று அமைந்தது. ஆனால் நாம் இன்று கருத்தையே மாற்றிவிட்டோம். (நாங்கள்தான் அரிச்சந்திர பரம்பரையில் வந்தவர்களாச்சே என்று எண்ணி கத்தும் என்ன்பதை கற்று என்று மாற்றியிருப்பார்களோ???)
இனி அடுத்த விடயத்துக்கு வருவோம். இது கொஞ்சம் மகளீரணியோடு சம்பந்தப்பட்டது. அதாவது இன்று பெண்களின் மீதான ஆண்களின் நம்பிக்கையீனங்களை வெளிப்படுத்த பல பாடல்கள், கருத்துக்கள், தத்துவங்கள் வழக்கத்திலிருக்கின்றன. இதில் "சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே..", "பெண்ணென்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம்.." போன்ற பாடல்கள் பிரபலமானவை. இவ்வாறான பாடல்கள் ஒருபுறமிருக்க "சேலை கட்டும் பெண்ணை நம்பாதே" என்ற ஒரு வரிவடிவம் நமக்குள் வழக்கத்தில் உள்ளது. சேலை கட்டும் பெண்ணை நம்பக் கூடாது என்றால், சுடிதார் அணியும், ஜீன்ஸ், T சேட் அணியும், பாவடை தாவணி அணியும் பெண்களைத்தான் நம்ப வேண்டுமா?? என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.
உண்மையில் "சேலைகட்டும் பெண்ணை நம்பாதே" என்பது "சேல் அகட்டும் பெண்ணை நம்பாதே" என்பதிலிருந்து திரிபடைந்த ஒன்றாகும். இங்கு சேல் அகட்டும் பெண்ணை நம்பாதே என்றால் கண்ணடிக்கும் பெண்ணை நம்பாதே என்று அர்த்தம். (இனியாவது இந்தக் கண்ணடிக்கிற பெண்களை நம்பமாட்டீங்கதானே!!!) ஆக மொத்தம் எவ்வளவு அர்த்தமுள்ள கருத்தை திரிபுபடுத்தி சம்பந்தமே இல்லாமல் "சேலை கட்டும் பெண்ணை நம்பாதே" என்று சேலை கட்டி பொட்டு வைத்து அழகாக காட்சி தருகின்ற அத்தனை பெண்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்த விளைவது எந்த வகையில் நியாயம். (மகளீர் அணியினர் எனக்கு மாலை போட்டு கெளரவிக்க விரும்பினால் முகவரியை பிரசுரிக்கத் தயார்.)
இப்படி சேலை கட்டும் பெண்ணை நம்பாதே என்ற விடயம் அமைய அடுத்த விடயத்திற்கு வந்தால் இது கொஞ்சம் ஆன்மீகத்தோடு சம்பந்தப்பட்டது. (அதில் நமக்கெல்லாம் நம்பிக்கை இருந்தால்தானே!) அதாவது, "விதியை மதியால் வெல்ல முடியும்" என்ற ஒரு கருத்து நம்மிடையே நிலவுகின்றது. இத்தனை நம்மில் பெரும்பாலானோர் நமக்கென நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விதி என்ற ஒன்றை நமது புத்தியால் வெற்றி கொள்ள முடியும் என்று பொருள் கொள்கின்றோம்.
உண்மையில் விதி என்ற ஒன்று இருக்குமேயானால் அது நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகவே அமையும். (விதி என்பதில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இது வேடிக்கையாக இருக்கட்டும்) இப்படி நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒன்றை எப்படி நமது புத்தியால் வெல்ல முடியும்??? என்பது இயல்பான கேள்வி. ஆகவே நாம் விதியை மதியால் வெல்லலாம் என்பதை நமக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விதியை நமது புத்தியால் வெல்ல முடியும் என்று அர்த்தம் கொள்ளவது பொருத்தமற்றதாகவே அமைகின்றது. மாறாக இத்தனை இறை நம்பிக்கை உள்ளவர்கள் குறிப்பாக சைவர்கள் "நமக்கென நிர்ணயிக்கப்பட்ட விதியை மதியை (சந்திரனை) தலையில் சுமந்த சிவனால் வெல்ல முடியும்" என்றும் ஏனைய சமயத்தவர்கள் "நமக்கென நிர்ணயிக்கப்பட்ட விதியை மதிபோன்ற (சந்திரன் போன்ற) தத்தமது கடவுள்களை விழித்து அவர்களால் வெல்ல முடியும்" என்றும் அந்தக் காலத்தில் அர்த்தம் கொண்டிருக்கின்றார்கள். (ஆஹா நம்மைப் போல கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் இனி இதனை உச்சரிக்கவே முடியாது போல)
இறுதியாக இன்னுமொரு மருவிய அர்த்தம் கொள்ளல், "எறும்பு தின்றால் கண் கூர்மையாகும்". எறும்பைப் பிடித்து பொரித்தோ, அவித்தோ, பச்சையாகவோ, தேநீரி, தண்ணீரில் கலந்தோ உட்கொண்டால் கண்கூர்மை பெறும் என்று நாம் இதனை அர்த்தம் கொள்கின்றோம். (அது சரி கண்கூர்மையாக கட்டெறும்பைப் பிடித்து தின்று உதட்டிலும், நாக்கிலும் கடிவேண்டிய உத்தமர்கள் உங்கள் அனுபவங்களை கருத்துரையில் மறைக்காமல் வெட்கப்படாமல் சொல்லிடுங்க)
எறும்பை சாப்பிடுவதால் கண்கூர்மை பெறும் என்று எந்த விஞ்ஞானம் அல்லது மருத்துவம் சொன்னது.?? ஆகமொத்தம் இதுவுமொரு தவறான புரிந்துகொள்ளல்தான். அதாவது அன்றைய காலங்களில் வீட்டிற்கு முன்னால் அதிகாலையில் அரிசிமாக் கோலம்போடும் வழக்கம் இருந்தது. (இப்போதும் சில வீடுகளில் உள்ளது) இந்த செயலுக்கு பல விளக்கங்கள் சொல்லப்பட்டன. குறிப்பாக வீட்டுச் சூழலில் உள்ள எறும்புகள் போன்ற உயிரிகளுக்கு அரிசிமாக் கோலத்தின் மூலம் உணவு கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. ஆகவே இதன்படி கோலம்போடுவதை ஊக்குவிப்பதற்காக கோலத்திலுள்ள அரிசிமாக்களை எறும்பு தின்றால் கண் கூர்மையாகும் என்று சொன்னார்கள். இதனையே நாம் எறும்பைத் தின்றால் கண் கூர்மையாகும் என்று நினைத்து செயற்படுகின்றோம். (எறும்பு வியாபாரம் செய்யலாம் போல..)
இவ்வாறாக பல விடயங்கள் உள்ளன... எனக்குத் தெரிந்த அல்லது இனி அறிந்துகொள்ளப்போகின்ற இவ்வாறான விடயங்களை எல்லாம் உங்களோடு பகிர்ந்துகொள்வேன் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கின்றேன்...
10 comments:
நன்றாய்ச் சொல்கிறீர்கள். தொடருங்கள்.
வானம்பாடிகள் said...
ஆமா கட்டெறும்பு அனுபவமேதும் உங்களுக்கு இல்லையா??? (வேடிக்கை)
////தொடருங்கள்.////
உங்கள் அன்புடனும், ஆதரவுடனும்...
நன்றிகள்... அடிக்கடி வாருங்கள்....
செந்தூரன்,
உங்களது 26ஆவது பதிவில்தான் உங்கள் வலைபதிவுக்கு வந்திருக்கிறேன்.. நன்றாக எழுதுகிறீர்கள்... நான் வலைப்பதிவு தொடங்கிய காலத்தில் இவ்வாறான விடயங்களைத் தான் எழுதியிருந்தேன்...
அதை மீளவும் நினைவுபடுத்தி தொடர்பதிவு எழுதவும் இருக்கிறேன்.
இனி அவ்வப்போது வருவேன்..
இந்த word verification இனை எடுத்துவிடலாமே... மிக்க கஷ்டப்படுத்துது..
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
வாழ்த்துக்கள் தொடருங்கள்..
வேர்ட் வேரிபிகேஸனை எடுக்க முடியுமா? பின்னூட்டமிட கடினமாக உள்ளது.
மதுவதனன் மௌ. / cowboymathu said...
////உங்களது 26ஆவது பதிவில்தான் உங்கள் வலைபதிவுக்கு வந்திருக்கிறேன்..////
இப்பத்தான் அண்ணா இந்த தமிழிஸ், யாழ்தேவி பற்றி எல்லாம் தெரிய வந்தது... உங்கள் வருகை சந்தோசம் தருகிறது...
////நான் வலைப்பதிவு தொடங்கிய காலத்தில் இவ்வாறான விடயங்களைத் தான் எழுதியிருந்தேன்...அதை மீளவும் நினைவுபடுத்தி தொடர்பதிவு எழுதவும் இருக்கிறேன்.////
உங்கள் வலைப்பதிவை பார்த்தேன்...
நிச்சயமாக எழுதுங்கள் அண்ணா... ஆவலாக உள்ளேன்....
////இனி அவ்வப்போது வருவேன்..////
வருகையை எதிர்பார்க்கின்றேன்... அடிக்கடி வாருங்கள்... நன்றி அண்ணா...
ilangan said...
////வாழ்த்துக்கள் தொடருங்கள்..////
உங்கள் வாழ்த்துக்கள் உற்சாகம் தருகின்றது... உங்கள் அன்புடனும் ஆதரவுடனும்....
வாழ்த்துக்களுக்கும், வருக்கைக்கும் இதயத்தால் இனிய நன்றிகள்...
அடிக்கடி வாருங்கள்...
மதுவதனன் மௌ. / cowboymathu and ilangan said...
////இந்த word verification இனை எடுத்துவிடலாமே... மிக்க கஷ்டப்படுத்துது..////
////வேர்ட் வேரிபிகேஸனை எடுக்க முடியுமா? பின்னூட்டமிட கடினமாக உள்ளது.////
எனக்கு அதை எப்பிடி எடுக்கிறதென்று தெரியல்ல... முயற்சி செய்கிறன்... முடியாவிட்டால் மின்னஞ்சல் வழியே தொடர்புகொள்கிறேன்....
Dash Board -> Settings -> comments -> Show word verification for comments? yes or no.
Click "no".. Save it .. and You are done with it.. Best wishes..
bullet. :)
புல்லட் said...
////Best wishes..////
உங்கள் வாழ்த்துக்கள் உற்சாகம் தருகின்றது...
வாழ்த்துக்களுக்கும், வருக்கைக்கும்,உதவிக்கும் இதயத்தால் இனிய நன்றிகள்...
உங்கள் உதவியால் அதனை செய்ய முடிந்துள்ளது அண்ணா... நன்றிகள்...
அடிக்கடி வாருங்கள்...
உங்களை ஒரு தொடர் பதிவிற்கு http://shanthru.blogspot.com/2009/09/blog-post_16.html இங்கே அழைத்திருக்கின்றேன் தொடருங்கள்
Post a Comment