தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக அரச சார்பிலும், இல்லை அவர் இன்னும் உயிருடன்தான் உள்ளார் என தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பிலும், கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு இப்போது மக்கள் கொஞ்சம் தெளிவடைந்துள்ளார்கள். அதாவது பெரும்பாலான தமிழ் மக்கள் புலிகளின் தலைவர் இன்னும் பாதுகாப்பாக உள்ளார் என்ற முடிவிற்கு வந்திருக்கின்றார்கள். இந்த நிலையில் இலங்கையில் அடுத்து வரும் நாட்கள் அல்லது வருடங்கள் எப்படி அமைய போகின்றன? என்பது ஒரு பெரும் கேள்வியாக உருவெடுத்துள்ளது. அதாவது இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசாங்கம் புலிகளை அழித்த பின்னர் தீர்வு திட்டத்தை முன்வைக்க போவதாக முன்னர் கூறியமை குறிப்பிடதக்கது. இந்த நிலையில் இப்போது புலிகளை அழித்தது விட்டதாகவும் அதன் தலைமையை அழித்தது விட்டதாகவும் அரச தரப்பில் இருந்து உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்து வரும் நாட்கள் அல்லது வருடங்கள் நிச்சயம் ஒரு இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டத்தை நோக்கி நகரும் என எந்தவொரு நாடோ அல்லது அமைப்போ கருதுமானால் அது முட்டாள்தனமான ஒன்றாகவே அமையும். அந்த வகையில் இந்த விடயம் தொடர்பில் கொஞ்சம் ஆழமாக நோக்க வேண்டியது இன்றைய நிலையில் அவசியமாக உள்ளது. கடந்த பல தசாப்தங்களாக தொடரும் இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு குறுகிய பார்வை போதுமானதாக இருக்காது என்ற போதிலும் இனி வரும் நாட்கள் பற்றி முக்கியமான ஒரு சில விடயங்களை குறிப்பிடலாம்.
இப்போது அரசின் பார்வையில் போர் முடிந்து விட்டது. இனி அடுத்து வரும் நாட்களில் என்ன நடக்கும்? இடம் பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த வேண்டும். பின்னர் வடக்கை கட்டிஎழுப்ப வேண்டும். அதன் பின் அவசர அவசராவசரமாக ஒரு மாகாண சபை தேர்தலை வடக்கில் நடாத்த வேண்டும். அதன் பின் அபிவிருத்தி, மக்கள் புனர்வாழ்வு.... இப்படி பல பல திட்டங்களால் வடக்கில் வசந்தத்தை வீச செய்ய வேண்டும். ஆக மொத்தம் இதெல்லாம் நடந்து முடிய இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். அது வரையான காலத்துக்குள் இப்போதுள்ள அரசாங்கம் அல்லது ஜனாதிபதி பதவியில் இருப்பாரா? அப்போது பதவியில் இருப்பவரின் கொள்கை இப்போதுள்ள ஜனாதிபதியின் கொள்கையுடன் ஒன்று பட்டதாக இருக்குமா? இவை எல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டிய கேள்விகள் மட்டுமன்றி பல தடவை பலரும் சிந்தித்த கேள்விகளும் கூட. உண்மையை செல்வதாக இருந்தால் இனி இலங்கையில் "இனப்பிரச்சினைக்கான தீர்வு" என்ற சொல்லை கேட்பது குறைவாக இருக்கும். மாறாக அபிவிருத்தி, மீளக்கட்டி அமைத்தல், புனர்வாழ்வு, மீள் குடியேற்றம், மாகாண சபை தேர்தல், செயலணி குழு.... இப்படியான சொற்களையே அதிகம் கேட்க முடியும்.
கடந்த பத்தொன்பதாம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதியின் உரையும் இதனையே பிரதிபலிக்கின்றது.
Friday, May 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment