தலைப்பை பார்த்தவுடன் எதோ விவாதம் என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பாளி இல்லை. இது விவாதமும் இல்லை விதண்டா வாதமும் இல்லை. சாதாரணமாக எனது தாழ்மையான கருத்து ஏற்று கொள்வதும் ஏற்காமல் விடுவதும் உங்கள் உங்கள் பக்குவம். உண்மையில் பேய் பற்றி பலரும் சொல்கின்ற கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு கிடையாது. அதாவது பேய் என்ற ஒன்று இலலை என்று அடித்து சொல்பவன் நான். இதனால் எனக்கும் எனது நண்பர்களிற்கும் இடையில் அடிக்கடி விவாதம் வருவதுண்டு. கடவுளை காட்ட சொல்லி நண்பனிடம் அடி வாங்கிய அனுபவமோ என்னவோ தெரியவில்லை, பேயை காட்ட சொல்லி கேட்பதற்கு இது வரையில் தோன்றவில்லை.
பொதுவாக பேய் உண்டு என்று யாராவது வாதாடினால் நான் கேட்கும் முதலாவது கேள்வி, கனவு என்று ஒன்று நடமாடுகின்றதா? அதாவது பேய் என்று நீங்கள் சொல்வது போல கனவு என்று, ஒரு உருவம் உள்ளதா? இந்த கேள்விக்கு பலரும் சொல்லும் பதில் "இல்லை"என்பதுதான். அப்படியானால், கனவு என்றால் என்ன? இது எனது இரண்டாவது கேள்வி. இதற்கு வரக்கூடிய பதில் கனவு என்பது ஒரு "பிரமை". அதாவது கற்பனைகளின் நிழல் என்று கனவை அடையாளப்படுத்த முடியும். சரி இப்ப கனவு என்றால் என்ன என்பதா முக்கியம்?என்று நீங்கள் கேட்பது புரிகிறது. கனவு என்பது ஒரு கற்பனை நிழல் என்றால் ஏன் பேய்க்கு மட்டும் உருவம் கொடுக்க வேண்டும்?. அதனையும் ஒரு கற்பனை நிழலாக அடையாளப்படுத்தி விட வேண்டியதுதானே? உண்மையை சொல்லவதாக இருந்தால் அதுதான் நிஜம். அன்றி பேய்க்கு என ஒரு உருவம் கிடையாது. கனவு என்பது உருவம் உள்ளது என்று யாராவது நிரூபித்தால், நான் பேய் உண்டு என்பதை ஏற்று கொள்கிறேன். அதாவது பேய்க்கு உருவம் உண்டு என்பதை ஏற்று கொள்ள தயார். ஒரு மன பிரமைதான் பலருக்கும் பேய்க்கான உருவத்தை காட்டுகின்றது என்பது எனது கருத்து. அன்றி பேய் என்பது கனவு போல தமிழில் உள்ள ஒரு சொல் அவ்வளவுதான்.
பேய் பற்றிய இந்த பதிவை இடும் போது ஒரு கதை ஞாபகம் வருகிறது, ஒரு தடவை யாழ்ப்பாணத்தில் செம்மணி சுடுகாட்டிற்கு நள்ளிரவில் சென்று அங்குள்ள மரக்குற்றியில் ஆணி அடித்துவிட்டு வருவதாக ஒருவர் சபதம் எடுத்துவிட்டு சென்றிருக்கிறார், அங்கே அவர் சென்று ஆணி அடித்து விட்டு திரும்ப வீடு வர முயற்சித்த போது அவரால் ஒரு அடி கூட நகர முடியவில்லை. இதனால் அந்த இடத்திலேயே பேய் அடித்து அவர் இறந்து விட்டார். (இப்படி சொன்னால் உடன நம்பீடுவீங்க்களே) அங்கு நடந்தது என்ன தெர்யுமா? அவரை பேயும் அடிக்கல்ல பிசாசும் அடிக்கல்ல. அவர் அந்த மரக்குற்றியில் ஆணி அடிக்கும் போது தனது சாரத்தையும் சேர்த்து ஆணியால் அடித்து விடாராம். அப்படி என்றால் அவரால் எப்படித்தான் நகர முடியும்.
ஆக மொத்தம் இல்லாத ஒன்றினை இருப்பதாக எண்ணிய ஒரு மனப்பிரமை ஒரு மனித உயிரை எடுத்தது. அது பேயும் இலலை பிசாசும் இலலை. பேய் பற்றி பல்வேறு ஆராட்சிகள் நடைபெறுகின்றன. என்னதான் ஆராய்ந்தாலும் சொன்னாலும் மனிதனின் மனப்பிரமையை மாற்ற முடியாது. விஞ்ஞானம் சொல்லவதெல்லாம் ஒன்றுதான் அதாவது சக்தி காப்பு. இது கூட ஒரு சில இடங்களில் பொய்யாக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் ஒற்றுமையாக உள்ளது. ஆகவே இறுதியாக ஒன்றை மட்டும் சொல்கிறேன் மனிதநிட்க்குள் இருக்கும் சக்தி அவன் இறந்த பின்னர் இந்த பூமியில் காக்கப்படுவது உண்மை, அன்றி அதனை பேய் என்றும் பிசாசு என்றும் உருவம் கொடுத்து அடையாளப்படுத்துவது அர்த்தமற்றது. இதனால் இளம் சமுதாயத்தினர் மத்தியில் பய உணர்வை விதைக்க முடியுமே தவிர வேறு எதையும் சாதிக்க முடியாது. இப்ப சொல்லுங்க நான் சொல்லிறது சரிதான? பேய் பற்றின அலுவலகத்தில நடந்த ஒரு சுவாரசியம் இருக்கு பிறகு பதியிறன்.
Thursday, May 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment